உனக்கென்ன வேணும் சொல்லு… மனைவி உபாசனாவுடன் குழந்தையை கையில் தூக்கி வந்த ராம்சரண்!
சென்னை : நடிகர் ராம் சரணுக்கு கடந்த வாரம் அழகிய பெண் குழந்தை பிறந்த நிலையில், மனைவி உபாசனா மற்றும் குழந்தையை மருத்துவமனையில் இருந்து அழைத்து செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் ஒரே மகன் ராம் சரணும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.
அண்மையில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தின் மூலம் உலகம் முழுவதும் இவரது புகழ் கொடிகட்டி பறக்கிறது.

ராம்சரண்-உபாசனா: ராம்சரண் மற்றும் உபாசனாவுக்கு 2012ம் திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆகி 11ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த டிசம்பர் மாதம் உபாசனா கர்ப்பமாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த மகிழ்ச்சியான செய்தியை ராம்சரணின் தந்தை சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.
வளைகாப்பு: இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் உபாசனாவுக்கு வளைகாப்பு நடைபெற்றது. இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் ராம்சரணின் நெருங்கிய நண்பர் அல்லு அர்ஜூன் மற்றும் சில முக்கியமான திரைப்பிரபலங்கள், நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். வளைகாப்பு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வரலானது.
பெண் குழந்தை: ராம் சரண் உபாசனா தம்பதியருக்கு செவ்வாய் கிழமை ஜூன் 20ஆம் தேதி அன்று, ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. பெண் குழந்தை பிறந்ததை தொடர்ந்து குழந்தையை பார்க்க அல்லு அர்ஜுன், நிஹாரிகா, பவன் கல்யாண் உள்ளிட்ட மருத்துவமனைக்கு வந்திருந்தனர்.
மகிழ்ச்சியில் குடும்பம்: தாதாவான சந்தோஷத்தில் இருக்கும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, பல ஆண்டுகளுக்குப் பிறகு எங்களது வேண்டுகோளை இறைவன் நிறைவேற்றி வைத்திருக்கிறார். ஆஞ்சிநேயருக்கு உகர்ந்த நாளான செவ்வாய் கிழமையில் குழந்தை பிறந்துள்ளது இரட்டிப்பு மகிழ்ச்சி என்றார். உலகெங்கிலும் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என்றார்.
குழந்தையுடன் ராம்சரண்: இந்நிலையில், நடிகர் ராம்சரண் குழந்தையை கையில் ஏந்தியபடி, தனது மனைவி உபாசனாவுடன் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் ராம்சரணின் முகத்தில் தந்தையான சந்தோஷம் தெரிகிறது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











