July 2024 upcoming movies: ஜூலை மாதம் ரிலீஸ் ஆகும் படங்களின் லிஸ்ட்!
சென்னை: கடந்த ஜூன் மாதம் கருடன், மகாராஜா போன்ற திரைப்படங்கள் வெளியான நிலையில் இந்த மாதம், பல்வேறு திரைப்படங்கள் ரிலீஸுக்கு வரிசையாக காத்திருக்கின்றன. இந்தியன் 2, சர்ஃபிரா, பேட் நியூஸ், டெட்பூல் மற்றும் வால்வரின் போன்ற படங்களை ஆவலுடன் பார்க்க காத்திருக்கிறார்கள். அவை எந்தெந்த தேதியில் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியன் 2: இந்தியன் படம் வெளியாகி 28 ஆண்டுகள் கழித்து கமல்ஹாசன் நடிப்பில் இப்படத்தின் இந்தியன் இரண்டாம் பாகம் ஜுலை 12ந் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தியன் 2 படத்தின் டிரைலர் மற்றும் 3 பாடல்களின் விடியோ வெளியாகி இணையத்தில் வைரலானது.

ராயன்: தனுஷின் 50ஆவது படமாக உருவாகியிருக்கிறது ராயன். இப்படத்தை தனுஷ் இயக்கி நடித்துள்ளார். காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சன் பிக்சர்ஸ் தயாரித்து ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் ஜூலை 26ந் தேதி வெளியாக உள்ளது.
Sarfira: அக்ஷய் குமார் நடித்துள்ள சர்ஃபிரா படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இத்திரைப்படம் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக் ஆகும். இப்படத்தில் அக்ஷய் குமார், மதன், பரேஷ் ராவல், சீமா பிஸ்வாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ஜூலை 12 ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்.
Bad Newz: விக்கி கௌஷல், டிரிப்டி டிம்ரி மற்றும் அம்மி விர்க் நடித்துள்ள ஒரு நகைச்சுவைத் திரைப்படம் தான் Bad Newz. ஆனந்த் திவாரி இயக்கத்தில் உருவாக உள்ள இப்படம் ஜூலை 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Deadpool & Wolverine: Ryan Reynolds மற்றும் Hugh Jackman நடிப்பில் இந்த மாதம் 26ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ள திரைப்படம் Deadpool & Wolverine. மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸ் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாக உள்ளது. இப்படத்தில்,எம்மா கொரின் கசாண்ட்ரா நோவாவாகவும், டைலர் மானே சப்ரேடூத் ஆகவும் நடித்துள்ளனர்.
Despicable Me 4 : ஜூலை 5ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ள திரைப்படம் Despicable Me 4. மைக் ஒயிட், கென் டாரியோ ஆகியோரின் திரைக்கதையில் கிறிஸ் ரெனாட் மற்றும் பேட்ரிக் டெலேஜால் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தில் ஜோயி கிங், ஸ்டீபன் கோல்பர்ட் மற்றும் க்ளோ ஃபைன்மேன் ஆகியோரின் ரோலில் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











