மிரட்டலாக வெளியாகும் கோலிவுட் படங்கள்... எதிர்பார்த்த அந்த படமும் லிஸ்டில் வந்துடுச்சு!
சென்னை : கோலிவுட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்களான பொன்னியின் செல்வன்,கோப்ரா,டான் திரைப்படங்களின் ரிலீஸ் செய்தி வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனாவின் தாக்கம் காரணமாக பல முறை ரிலீஸ் செய்தி அறிவிக்கப்பட்டும் பல படங்களை குறித்த நேரத்தில் வெளியிட முடியாததால் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டன.
தற்போது தொற்று குறைந்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்த்த படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாக உள்ளன.

பீஸ்ட்
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது "பீஸ்ட்" படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹேக்டே நடித்துள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் தமிழர் திருநாளான ஏப்ரல் 14ந் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கே.ஜி.எஃப்
பிரபல இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் கே.ஜி.எஃப் : சாப்டர் 1, இந்தப் படத்திற்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்தது. முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் கே.ஜி.எஃப். : சாப்டர் 2 என்ற பெயரில் தயாராகியுள்ளது. இத்திரைப்படம் ஏப்ரல் 14ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

காத்துவாக்குல ரெண்டு காதல்
விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். .விஜய் சேதுபதி (vijay sethupathi) ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாராவும், சமந்தாவும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வைரலான நிலையில் இத்திரைப்படம் ஏப்ரல் 28ந் தேதி வெளியாக உள்ளது.

யானை
நடிகர் அருண் விஜய் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் 'யானை' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படம் மே மாதம் 6ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

டான்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடிக்கும் திரைப்படம் டான். அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இத்திரைப்படம் மே 13ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

கோப்ரா
இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் கோப்ரா படத்தில் நடித்துள்ளார் விக்ரம். நாயகியாக கேஜிஎஃப் படத்தில் நடித்த ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள கோப்ரா திரைப்படத்தில் விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் நடிப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன. ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த இத்திரைப்படம் மே மாதம் 26ந் தேதி வெளியாக உள்ளது.

விக்ரம்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படம் விக்ரம். இந்தப் படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், அஞ்சாதே நரேன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரித்துள்ளது. விக்ரம் திரைப்படத்தின் அப்டேட் கிடைக்காதா என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு நேற்று கமல் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார். இத்திரைப்படம் ஜூன் 3ந் தேதி முதல் திரையரங்குகளில் ரிலிசாக உள்ளது.
Recommended Video

பொன்னியின் செல்வன்
கல்கியின் வரலாற்று புதினமாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கி உள்ளார். இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பார்த்திபன், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகி உள்ள இத்திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ந் தேதி வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











