This week theatres: இந்த வாரம் தியேட்டரில் வெளியாக உள்ள படங்களின் லிஸ்ட்!
சென்னை: கடந்த மாதம் தனுஷ் இயக்கி நடித்த ராயன் படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து கடந்த வாரம் விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன்,ஐமா,போட் போன்ற திரைப்படங்கள் வெளியானது. இதில் எந்த படமும் எதிர்பார்த்த வரவேற்பை பெறாதநிலையில் இந்த வாரம் என்னென்ன படம் வெளியாகிறது என்று பார்க்கலாம்.
அந்தகன்: தியாகராஜன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் அந்தகன் படத்தில் பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, ஊர்வசி, யோகி பாபு, கே. எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், மறைந்த நடிகர் மனோபாலா, லீலா சாம்சன், பூவையார், செம்மலர் அன்னம், மோகன் வைத்யா, பெசன்ட் ரவி, லஷ்மி பிரதீப் உள்ளிட்ட பலர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படம் 9ந் தேதி உலகம் முழுவதும் தியேட்டரில் வெளியாக உள்ளது.

மின்மினி: சில்லுக்கருப்பட்டி, பூவரசன் பீபி, ஏலே ஆகிய திரைப்படங்களை இயக்கிய ஹலிதா ஷமீம் தற்போது இயக்கி உள்ள திரைப்படம் தான் மின்மினி. இப்படம் ஏழு வருட காத்திருப்புக்கு பிறகு வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியாக உள்ளது. இப்படத்தில், எஸ்தர் அனில், பிரவின் கிஷோர் மற்றும் கௌரவ் காளை ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.
நாற்கரப்போர்: வி6 பிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.வேலாயுதம் தயாரித்திருக்கும் படம் நாற்கரப்போர். எச்.வினோத், ராஜபாண்டி உள்ளிட்ட பல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஸ்ரீ வெற்றி, இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். அபர்ணதி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் அஸ்வின் லீட்ரோலில் நடித்துள்ளார். சதுரங்க விளையாட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இப்படம் ஆகஸ்ம் 9ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.
கவுண்டம்பாளையம்: நடிகர் ரஞ்சித் இயக்கி, நடித்துள்ள கவுண்டம்பாளையம் ஜூன் 5 ந் தேதி வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் படம் வெளியாவது தள்ளிப்போனது. நாடக காதல் என்பதே ஒரு நடிப்பு. சைக்கிள், கார், பைக், வைத்திருப்பவர்களை பொருளாதாரத்தில் உயர்ந்தவர்களாக தவறாக புரிந்து கொண்டு காதலர்கள் தவறாக தேர்வு செய்கின்றனர். காதலர்கள் நல்ல காதலை தேர்ந்தெடுக்க வேண்டும். என்பதை சொல்லும் படத்திற்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும். இந்த படம் எந்த சமூகத்தினரின் மனதும் புண்படாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது ரஞ்சித் தெரிவித்திருந்தார்.இப்படம் 9ந் தேதி வெளியாகிறது.
P- 2 இருவர்: அறம் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் ராமலிங்கம் தயாரிக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி சிவம் இயக்கியுள்ள படம் " P- 2 " இருவர் ". இந்த படம் மூலமாக மனோஜ், சித்து அறிமுகமாகிறார்கள். ஹாரர் மற்றும் திரில்லருடன் உருவாகி இருக்கும் இப்படம், 9 ஆம் தேதி வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











