தரமான ஹாரர் படம் ஷைத்தான்.. இந்த வாரம் தியேட்டரில் வெளியாக உள்ள படங்கள்!
சென்னை: தியேட்டரில் கடந்த இரண்டு மாதமாகவே டல்லாகத்தான் இருக்கிறது. லால் சலாம் படத்திற்கு பிறகு பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அதுவும் கடந்த வாரம் கௌதம் வாசுதேவ் மேனனின் ஜோஸ்வா இமைபோல் காக்க திரைப்படம் வெளியானது. அதுவும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லாததால், மலையாள திரைப்படமான மஞ்சும்மல் பாய்ஸ் படம் தியேட்டர்களை ஆக்கிரமித்துள்ளது. இந்த வாரம் தியேட்டரில் வெளியாக உள்ள படங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
ஷைத்தான்(இந்தி): சூப்பர் 30, கானாபத் உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் விகாஸ் பால் இயக்கியுள்ள திரைப்படம் ஷைத்தான். இதில் அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தை அஜய் தேவ்கன் தயாரித்துள்ளார். அமித் த்ரிவேதி இசையமைத்துள்ளார். பயம், பதற்றம், அச்சம், திகில் உணர்வுகளை கடத்தும் இத்திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியாக உள்ளது.

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே: இயக்குநர் பிரசாத் ராமர் இயக்கத்தில் வரும் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியாக உள்ள திரைப்படம் நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே. இளசுகளின் அவுட்டிங் மற்றும் டேட்டிங் விஷயத்தை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ப்ரீத்தி கரன், செந்தூர் பாண்டியன், சுரேஷ் மதியழகன், பூர்ணிமா ரவி, தமிழ்ச்செல்வி, ஷிவானி கீர்த்தி என புதுமுகங்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

உணர்வுகள் தொடர்கதை: அறிமுக இயக்குநர் பாலு ஷர்மா இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் உணர்வுகள் தொடர்கதை. ரொமான்டிக் கதையைக் கொண்ட இப்படத்தில், ஹிருஷிகேஷ் மற்றும் ஷெர்லின் சேத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் மார்ச் 8ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.

பிரேமலு (தெலுங்கு): மலையாள திரையுலகிற்கு இந்த பிப்ரவரி மாதம் ஜாக்பாட் மாதம் என சொல்லும் விதமாக வாரம் ஒரு ஹிட் படம் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் கடந்த பிப்ரவரியில் வெளியாகி, ஓரளவு தெரிந்த முகங்களான நஸ்லேன் மற்றும் மமிதா பைஜூ நடித்த பிரேமலு என்கிற படம் வெளியானது. தற்போது வரை 50 கோடியை தாண்டி இந்த படம் வசூலித்துள்ளது. இந்தப் படத்தை கிரிஸ் ஏடி என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இத்திரைப்படம் தெலுங்கிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு மார்ச் 8ந் தேதி வெளியாகி உள்ளது.



Click it and Unblock the Notifications











