Theater Release movies: இந்த வாரம் தியேட்டரில் வெளியாக உள்ள படங்களின் லிஸ்ட்!
சென்னை: கடந்த சில வாரமாகவே தமிழ் சினிமாவில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிய படங்கள் ஏதும் வெளியாகாமல் தியேட்டர்கள் வெறிச்சோடி கிடக்கின்றன. அந்த நேரத்தில் தான் மலையாள திரைப்படமான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் தமிழ் நாட்டில் வசூலை அள்ளியது. அதேபோல பிரேமலு திரைப்படமும் கடந்த வாரம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. இதையடுத்து, இந்த வாரம் தியேட்டரில் ஒரு சில சிறு பட்ஜெட் படங்கள் வெளியாக உள்ளன அவை என்ன படங்கள் என்று பார்க்கலாமா?
ஆடு ஜீவிதம் (தமிழ்): மலையாள திரையுலகின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான பிளெஸ்ஸி இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ஆடு ஜீவிதம். இப்படத்தில், பிருத்விராஜ், அமலா பால், வினித் சீனிவாசன், ரிக் அபி, சந்தோஷ் கீழத்தூர், லீனா உள்ளிட்டோர் நடித்துள்ளார். பான் இந்திய திரைப்படமாக இப்படம் மார்ச் 28ம் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும், அதிகரித்துள்ளது.

ஹாட்ஸ்பாட்( தமிழ்) : ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த திட்டம் இரண்டு, ஜி.வி.பிரகாஷ் நடித்த அடியே ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஹாட்ஸ்பாட். இதில், கலையரசன், ஆதித்யா பாஸ்கர், கெளரி கிஷன், சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி, ஜனனி ஐயர், சுபாஷ், சோபியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சதீஷ் ரகுநாதன் - வான் ஆகியோர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு, கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் சர்ச்சையான நிலையில் இப்படம் மார்ச் 29ந் தேதி வெளியாக உள்ளது.

நேற்று இந்த நேரம் (தமிழ்): பிக்பாஸ் புகழ் ஷாரிக் ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் நேற்று இந்த நேரம். மர்மமான முறையில் தொலைந்து போன நண்பர்களும், அதன் பின்னணியில் நடக்கும் திடுக்கிடும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இக்கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர். ஹரிதா மற்றும் மோனிகா ரமேஷ் என இரண்டு பேர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை நித்தின் ஆதித்யா மற்றும் சாய் ரோஷன் கே.ஆர். இணைந்து எழுதியுள்ளனர். இப்படம் வரும் 29ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.

வெப்பம் குளிர் மழை (தமிழ்): இயக்குநர் திரவ் ஹீரோவாக அறிமுகமாகி உள்ள படம் வெப்பம் குளிர் மழை. இதில், இஸ்மத் பானு, எம்.எஸ்.பாஸ்கர், ரமா, மாஸ்டர் கார்த்திகேயன், விஜயலட்சுமி என பலர் நடித்துள்ள இத்திரைப்படம் மார்ச் 29ந் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தை பாஸ்கல் வேதமுத்து இயக்கி இருக்கிறார். ஷங்கர் ரங்கராஜன் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு பிருத்வி ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Tillu Square (தெலுங்கு): டில்லு ஸ்கொயர் தெலுங்கு திரைப்படத்தில் சித்து ஜொன்னலகட்டா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் மார்ச் 29ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. இப்படத்தை, இயக்குனர் மல்லிக் ராம் இயக்கி உள்ள இப்படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது. இப்படத்தை ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. பீம்ஸ் செசிரோலியோ இப்படத்தின் பின்னணி இசையமைத்துள்ளார்.



Click it and Unblock the Notifications











