நடிகர் விஷாலின் அடுத்த படம் பற்றிய முக்கிய அப்டேட்!
சென்னை : ஆரம்பத்தில் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்த விஷால் இப்பொழுது தயாரிப்பிலும் மும்முரமாக செயல்பட்டு வருகிறார்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சக்ரா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்பொழுது ஆர்யாவுடன் இணைந்து எனிமி படத்தில் நடித்து வரும் விஷால் அடுத்த படத்தை பற்றிய முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உதவி இயக்குனராக
நடிகர் விஷாலின் திரைப்படங்கள் தனித்துவமான கதைக்களத்தை கொண்டிருப்பதால் தொடர்ந்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்க இவரின் படங்கள் தெலுங்கு மொழியிலும் டப்பிங் செய்யப்பட்டு அங்கும் வெற்றி பெற்று வருகிறது. செல்லமே மூலம் கதாநாயகனாக அறிமுகமான விஷால் அதற்கு முன்பாக பல திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார்.

ஆக்ஷன் நாயகனாக
சண்டக்கோழி, திமிரு, மலைக்கோட்டை, தாமிரபரணி என இவர் நடித்த பல திரைப்படங்களில் ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சமே இல்லாமல் இருக்க ஆக்ஷன் நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் விஷால் தற்போதெல்லாம் கமர்சியல் படங்களை தவிர்த்து விட்டு தனித்துவமான அதே சமயம் சமூக அக்கறையுள்ள கதைகளையும் தேர்ந்தெடுத்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

விஷால் ஃபிலிம் ஃபேக்டரி
நடிகராக மட்டும் இருந்த விஷால் இப்பொழுது விஷால் ஃபிலிம் ஃபேக்டரி என்ற சொந்த தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கி அதன் மூலம் பல திரைப்படங்களை வெளியிட்டும் தான் நடிக்கும் திரைப் படங்களை தயாரித்தும் வருகிறார். இரும்புத்திரை, துப்பறிவாளன் போன்ற படங்களை தொடர்ந்து அதே பாணியில் சைபர் க்ரைமை மையமாகக் கொண்டு உருவான சக்ரா திரைப்படத்தை தயாரித்து அதில் நடித்தும் இந்த விஷாலுக்கு இந்த திரைப்படமும் வெற்றிப் படமாக அமைந்தது.

ஏப்ரல் 2ஆம் தேதி
தற்பொழுது ஆர்யாவுடன் இணைந்து எனிமி படத்தில் நடித்து வரும் விஷால் அதற்காக துபாய் சென்றுள்ளார். படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட பல புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் மூலம் உருவாக உள்ள அடுத்த படத்தின் அறிவிப்பு வரும் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











