கமல்ஹாசனின் இந்த படம் தான் முதல் பான் இந்தியா படம்.. ரஜினிகாந்தின் கூலி வேறலெவல்.. உபேந்திரா பளிச்!
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வரும் கூலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கன்னட திரை உலகின் முன்னணி நடிகர் உபேந்திரா நடித்த வருகிறார். அவரது நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள UI படம் இந்த வாரம் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி மற்றும் மஞ்சு வாரியர் நடித்துள்ள விடுதலை 2 திரைப்படத்திற்கு போட்டியாக உபேந்திராவின் படமும் வெளியாகிறது. ஏற்கனவே அந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய நிலையில், தற்போது படம் வெளியாக உள்ள நிலையில் அதற்கான புரமோஷன் வேலைகளில் உபேந்திரா இறங்கியுள்ளார்.

ரஜினிகாந்தின் கூலி படத்தில் நடித்து வரும் உபேந்திரா கடைசியாக ரஜினிகாந்த் நடித்து வெளியான ஜெயிலர் திரைப்படம் அவருக்கு எந்த அளவுக்கு பிடிக்கும் என்பது குறித்தும் பான் இந்தியா படங்கள் குறித்தும் பேசியுள்ளார்.
கமல் படம்: பான் இந்தியா படங்கள் இப்போது மட்டும் இன்றி அந்த காலத்தில் இருந்தே வந்து கொண்டு தான் இருக்கின்றன. எனக்கு தெரிந்து முதல் பான் இந்தியா படம் என்றால் அது கமல்ஹாசன் நடித்த புஷ்பக் (பேசும்படம்) தான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏகப்பட்ட பான் இந்தியா படங்களை கொடுத்துள்ளார். அதையெல்லாம் பார்த்து தான் மற்ற மொழிகளில் உள்ள ரசிகர்கள் மற்றும் நடிகர்கள் ஸ்டைல் என்றால் என்னவென்று கற்றுக் கொண்டனர் என உபேந்திரா கூறியுள்ளார்.

ஜெயிலர் ரொம்ப பிடிக்கும்:
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா, சிவராஜ்குமார், மோகன்லால், விநாயகம், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் சமீபத்தில் தனக்கு பிடித்த தமிழ் படம் எனக்கூறிய உபேந்திரா, சீயான் விக்ரம் மற்றும் சூர்யா இணைந்து நடித்த பிதாமகன், ரஜினிகாந்த் மற்றும் மம்முட்டி நடித்த தளபதி உள்ளிட்ட படங்கள் பிடிக்கும் என்றார். மணிரத்னம் மற்றும் ஷங்கர் இயக்கத்தில் வெளியான படங்கள் தன்னை வெகுவாக கவர்ந்த தமிழ் படங்கள் என்றும் கூறியுள்ளார்.
கூலி சம்பவம்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமீர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சவுபின் சாகிர் மற்றும் ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தில் மிகப்பெரிய சம்பவம் இருக்கு என்றும் எப்போதுமே படத்தை இயக்குநராகவோ நடிகராகவோ பார்க்க மாட்டேன் ஒரு ரசிகனாக மட்டுமே பார்ப்பேன். UI படத்தையும் அந்த நோக்கத்திலேயே எடுத்துள்ளேன் என்றும் கூறியுள்ளார். டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகியுள்ள உபேந்திராவின் திரைப்படம் கன்னட திரை உலகில் மற்றும் ஒரு காந்தாராவாக மாறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



Click it and Unblock the Notifications











