புத்தி இருந்தா தியேட்டரை விட்டு ஓடிடுங்கன்னு சொன்ன உபேந்திரா.. UI பட முதல் நாள் வசூல் தேறுச்சா?
பெங்களூர்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமீர்கான், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் கூலி படத்தில் இணைந்து நடித்து வரும் கன்னட நடிகரான உபேந்திரா இயக்கி நடித்துள்ள UI திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. படம் ஆரம்பிக்கும் முன்னதாக இந்த படம் கற்பனை கதை என்றெல்லாம் இயக்குநர்கள் உருட்டுவார்கள். படம் முடிந்து ரசிகர்களுக்கு படம் பிடிக்கவில்லை என்றால் அவர்களுக்கு புரியவில்லை, இதை இந்த பெர்ஸ்பெக்டிவில் பார்க்கணும் என்றெல்லாம் தனிக்கதை அளப்பார்கள்.
ஆனால், உபேந்திரா தனக்கே உரித்தான பாணியில், நீ ரொம்ப புத்திசாலியா இருந்தா படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே தியேட்டரை விட்டு ஓடிடு என வார்னிங் கார்டு போட்டு படத்தை ஆரம்பித்துள்ளார்.

கடுமையான விமர்சனங்கள் ஒரு பக்கம் குவிந்தாலும் UI படத்துக்கு கன்னட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு முதல் நாளில் கிடைத்துள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..
2 மணி நேரக் கொடுமை: உபேந்திரா நடித்து இயக்கியுள்ள UI படத்தை பார்த்து சிரிக்கலாம் என்று சென்ற ரசிகர்களுக்கு நிச்சயம் 2.13 மணி நேர தலைவலி கன்ஃபார்ம் என்றே பலரும் கடுமையாக இந்த படத்தை விமர்சித்து வருகின்றனர். அதிலும், கல்கி மற்றும் சத்யா என டபுள் ஆக்ஷனில் அண்ணன் தம்பியாக நடித்து எங்கே திரும்பினாலும் இவன் வேற வந்து டார்ச்சர் பண்றானே என ரசிகர்களை புலம்ப வைத்துள்ளார்.
UI முதல் நாள் வசூல்: உபேந்திராவின் முந்தைய படங்களே ரசிகர்களை பெரிதும் சோதித்து வந்த நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் முதல் டபுள் மீனிங் பாடல்கள் என ஏற்கனவே ரசிகர்களை வச்சு செய்தது. ஆனால், அப்படி இருந்தும் முதல் நாள் 7 கோடி ரூபாய் வசூலை உலகளவில் இந்த படம் ஈட்டியுள்ளதாக ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி உள்ளன. கன்னட வெர்ஷனில் மட்டுமே 6 கோடி ரூபாய் வசூலை இந்த படம் முதல் நாளில் ஈட்டியிருக்கிறது.

லோகேஷ் என்ன பண்ணப்போறாரோ?: உபேந்திராவை கூலி படத்தில் நிச்சயம் லோகேஷ் கனகராஜ் மிரட்டலான ரோலில் நடிக்க வைத்து ரசிகர்களை திருப்திப்படுத்துவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கூலி பட நடிகர் படம் என்பதற்காக படத்தை பார்க்க செல்ல வேண்டாம் என்று ரசிகர்களே தம்பி அந்த பக்கம் போயிடாத என எச்சரித்து வருகின்றனர்.
குறிப்பு: உபேந்திராவின் UI படம் தொடர்பான அதிகாரப்பூர்வ வசூலை படக்குழு இன்னமும் அறிவிக்கவில்லை. இது sacnik போன்ற பாக்ஸ் ஆபிஸ் வெப்சைட்களில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் மட்டுமே.


Click it and Unblock the Notifications











