யாருய்யா டப்பிங் கொடுத்தது? விஜய் சேதுபதியின் உப்பெனா டிரைலர் ரிலீஸ்.. சரமாரி விளாசும் நெட்டிசன்ஸ்!
ஐதராபாத்: விஜய் சேதுபதி நடித்துள்ள தெலுங்கு பட டிரைலரில் அவருக்கு டப்பிங் குரல் சரியாக மேட்ச் ஆகவில்லை என்று ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.
தமிழ் தவிர, தெலுங்கு, மலையாளம், இந்தி என பிசி நடிகராகி இருக்கிறார் விஜய் சேதுபதி.
ஹீரோ, வில்லன், கேரக்டர் ரோல் என அனைத்து கேரக்டரிலும் தொடர்ந்து அசத்தி வருகிறார்.

அதிக வரவேற்பு
விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் அவர் புகழ் இன்னும் அதிகரித்திருக்கிறது. இந்தப் படத்தில் அவர் நடிப்பு கவனிக்கப் பட்டுள்ளது. மாஸ்டர் படம் தெலுங்கிலும் நன்றாக ஓடியதால், விஜய் சேதுபதிக்கு அங்கும் ரசிகர்கள் அதிகரித்துள்ளனர். அவருடைய சில வசனங்கள் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

விஜய் சேதுபதி
இந்நிலையில், 'உப்பெனா' என்ற தெலுங்கு படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். இந்தப் படத்தை புச்சிபாபு சனா என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். இதில் பஞ்சா வைஷ்ணவ் தேஜ் ஹீரோ. கீர்த்தி ஷெட்டி ஹீரோயின். தேவிஶ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.

பொருத்தமாக இல்லை
இந்த டிரைலரில் விஜய் சேதுபதி ஆக்ரோஷமாக வரும் காட்சிகள் மிரட்டலாக இருக்கின்றன. இதில் விஜய் சேதுபதிக்கு டப்பிங் குரல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவருக்கு யாருய்யா டப்பிங் கொடுத்தது? என்றும் அந்த குரல் பொருத்தமாக இல்லை என்றும் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கூறியுள்ளனர்.

நடிப்புக்கும் குரலுக்கும்
மாஸ்டர் படத்தில் அவருக்கு கொடுக்கப்பட்ட டப்பிங் குரல் நன்றாக இருந்தது என்றும் இதில் சரியாகப் பொருந்தவில்லை என்றும் ரசிகர்கள் ட்ரோல் செய்துள்ளனர். மாஸ்டர் படத்துக்கு முன்பே இது வந்திருந்தால், அதை ஏற்றிருக்கலாம் என்றும் சில ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். உப்பெனா படத்தின் அவர் நடிப்புக்கும் குரலுக்கும் சம்மந்தமில்லாமல் இருப்பதாகவும் சிலர் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











