இவர் தான் ரியல் ஆல்ஃபா மேல்.. அஜித் பட நாயகியை எப்படி மிதிக்கிறாரு பாருங்க.. மாமியாரை கூட விடல!
பெங்களூர்: சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், அனில் கபூர், திரிப்தி திம்ரி, பாபி தியோ, பப்லு பிரித்விராஜ் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான அனிமல் திரைப்படம் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை அள்ளிய நிலையில், பிரபலங்கள் முதல் விமர்சகர்கள் வரை பலரும் அந்த படத்தை கழுவி ஊற்றினர். ஆனால் அதே சமயம் பாலிவுட்டில் நடைபெற்ற பிலிம்பேர் விருதுகள் நிகழ்ச்சியில் ஆறு விருதுகளை அந்த படம் தான் அள்ளியது.
ஆல்பா மேலாக பெண்களை அடிமைப்படுத்தும் ஆணாகவும் காட்டு மிராண்டியாகவும் ரன்பீர் கபூர் நடித்திருப்பார். அதற்காகவே படத்திற்கு அனிமல் என டைட்டிலும் இயக்குநர் வைத்துள்ளார்.

எதிர்ப்பும் பாராட்டும்: விமர்சகர்களை பெரிதாக கண்டுகொள்ளப் போவதில்லை என அந்த படத்தின் வெற்றியை ருசித்த சந்தீப் ரெட்டி வங்கா தனது பேட்டிகளில் கூறினார். மேலும், இந்தியாவில் தன்னை தடுத்தால் ஹாலிவுட்டுக்கே சென்று விடுவேன் என்றும் பரபரப்பாக பேசியிருந்தார். அனிமல் திரைப்படம் படுமோசமான படம் என்றும் இந்த படம் மாஸ்டர் பீஸ் என்றும் இருதரப்பட்ட கருத்துகள் அந்த படத்திற்கு கிடைத்தன.
ஆல்பா மேல் சர்ச்சை: காலம் காலமாக சினிமாக்களில் ஹீரோக்களை முன்னிலைப்படுத்தி ஹீரோயின்களை டம்மி படுத்தி வருவதே ஆல்பா மேல் மனப்பான்மை தான் என்றும் அனிமல் படம் ஒன்றும் புதிதாக அதை சொல்லவில்லை என அந்த படத்திற்கு எதிராக கிளம்பிய சர்ச்சைகளுக்கு ரசிகர்கள் பதிலடி கொடுத்து வந்தனர். இந்தப் படத்தைப் பார்த்து வாந்தி தான் வருகிறது என ராதிகா சரத்குமார் படத்தின் பெயரைக் குறிப்பிடாமல் பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கடுமையான விமர்சனங்கள்: மேலும் நடிகர் ஆர்ஜே பாலாஜி அனிமல் படத்தை எல்லாம் பார்த்து விட்டால் அதே போன்ற ஒரு காட்சியையாவது தேவையில்லாமல் என்னுடைய படத்தில் வைத்து விடுவேனோ என்கிற அச்சத்திலேயே அந்த படத்தை பார்க்கவில்லை என்றும் பெண்ணை ஷூவை நக்க சொல்லும் காட்சி எல்லாம் இருப்பதாக கூறுகின்றனர். அதெல்லாம் ரொம்பவே மோசம் என விமர்சித்து இருந்தார். பின்னணி பாடகர் ஸ்ரீனிவாஸ் அனிமல்களுக்காக அனிமலை வைத்து ஒரு அனிமல் இயக்கிய படம் தான் அனிமல் என கடுமையாக விமர்சித்தார்.
உபேந்திரா தான் உண்மையிலேயே ஆல்ஃபா மேல்: இந்நிலையில், கன்னட திரைப்படத்தின் காட்சி ஒன்றை ஷேர் செய்து நெட்டிசன்கள் ரியல் ஆல்ஃபா மேல் உபேந்திரா தான் என பதிவிட்டுள்ளனர். அந்த காட்சியில் ஹீரோயின் வீட்டுக்கு சென்று ஹீரோயினை வயிற்றிலேயே குத்தி, கிழே தள்ளி வயிற்றிலேயே மிதிக்கிறார் உபேந்திரா. மேலும், தடுக்க வந்த மாமியாரையும் அடித்து தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
உபேந்திராவின் ரியல் மனைவி: அஜித்தின் ராஜா, விஜயகாந்த் உடன் ராஜ்ஜியம், விக்ரம் உடன் காதல் கிசு கிசு உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை பிரியங்கா உபேந்திரா உடன் கன்னட படத்தில் நடிக்க ஆரம்பித்த நிலையில், அவரையே காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். அவரைத்தான் அந்த படத்தின் ட்ரீம் சீனில் உபேந்திரா போட்டு மிதிப்பது போல நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அனிமல் படத்தின் எஃபெக்ட் காரணமாக தற்போது இந்த காட்சியை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











