சினிமாவில் போதைப் பொருள் விவகாரம்.. வதந்திகளை நம்பி டார்க்கெட் செய்வதா? பிரபல நடிகை ஆவேசம்!
பெங்களூரு: போதைப் பொருள் விவகாரத்தில் வதந்திகளை நம்பி, மீடியா டார்க்கெட் செய்வது வருத்தமளிக்கிறது என்று பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.
Recommended Video
சினிமாவில் போதைப் பொருட்கள் அதிகமாக புழங்கப்படுவதாக பிரபல நடிகை கங்கனா ரனவத் கடந்த சில நாட்களுக்கு முன் பரபரப்பு புகார் கூறினார்.
'அங்கு பிரபலமான போதைப்பொருள் கொக்கைன். கிட்டத்தட்ட வீடுகளில் நடக்கும் அனைத்து மது விருந்துகளிலும் இது தாராளம்' என்று கூறியிருந்தார்.

போதை மாத்திரை
ரத்த பரிசோதனை நடத்தப்பட்டால், அனைத்து டாப் ஹீரோக்களும் கம்பி எண்ணுவார்கள் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்ற அனிகா என்ற பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து விசாரித்தனர். அதில் அதிர்ச்சி தகவல் வெளியானது.

கன்னட சினிமா
அனிகாவுக்கு கன்னட சினிமா நடிகர், நடிகைகளுடன் தொடர்பு இருப்பதாகவும் திரையுலகினர் நடத்தும் பார்ட்டிகளின் போது அனிகா போதை மாத்திரைகளை விற்று வந்ததாகவும் தெரியவந்தது. இவர்கள் வெளி நாடுகளில் இருந்து தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை வாங்கி, நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்களுக்கு விற்பனை செய்துள்ளனர்.

போதைப் பொருள் தடுப்பு
இதையடுத்து அனிகாவிடம் போதை மாத்திரைகளை வாங்கிய நடிகர்கள், நடிகைகள், இசை அமைப்பாளர்கள் உள்பட கன்னட திரையுலகினரிடம் விசாரணை நடத்த, போதைப் பொருள் தடுப்பு போலீசார் முடிவு செய்துள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்தி வெளியானது. இந்நிலையில், கன்னட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ், இந்த போதைப் பொருள் விஷயம் பற்றி பேட்டி அளித்திருந்தார்.

இளம் நடிகர்கள்
அதில், ஒட்டுமொத்த கன்னட சினிமாவும் போதைப் பொருள் பயன்படுத்துவதாகச் சித்திரிப்பது தவறானது என்றும் சில இளம் நடிகர்கள் மட்டுமே இந்தப் பழக்கத்தில் இருப்பதாகவும் கூறியிருந்தார். சில நடிகைகள் சம்மந்தப்பட்ட கார் விபத்துகளில் கூட, சரியான விசாரணை நடத்தப்படவில்லை என்றும் அதில் தொடர்புடையவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தி இருந்ததாகவும் கூறியிருந்தார்.

ஷர்மிளா மந்த்ரே
இதனால் கடந்த சில மாதங்களுக்கு நடிகை ஷர்மிளா மந்த்ரே கார் விபத்தில் சிக்கியதால் அவரைதான் இந்திரஜித் சொல்கிறார் என்ற செய்தி பரவியது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நடிகை ஷர்மிளா, 'இந்த விவகாரத்தில் பிரபலங்களை இழுத்து விடுவதன் மூலம் யாரையோ மறைக்க வைக்க முயற்சிக்கிறார்கள். வதந்திகளை நம்பி கன்னட சினிமாவை, மீடியா டார்க்கெட் செய்வது வருத்தமளிக்கிறது என்று கூறியுள்ளார்.

தீர்க்கப்பட வேண்டும்
முன்னதாக, போதைப் பொருள் பிரச்னை விரைவில் தீர்க்கப்பட வேண்டும். ஏனென்றால் இது நம் சமூகத்துக்கு பிளேக் நோய் போன்றது. போதைபொருள் விற்பனையாளர்கள் இப்போது பிடிபட்டிருக்கிறார்கள். இதை செய்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு வாழ்த்துகள் என்று ட்வீட் செய்திருந்தார்.


Click it and Unblock the Notifications











