டாய்லெட் சீட்டை டிரெஸ்ஸா போடுங்க.. கார் சீட்டை டிரெஸ்ஸா மாற்றிய பிக் பாஸ் நடிகை.. பறக்கும் ட்ரோல்!

மும்பை: பிக் பாஸ் ஓடிடி பிரபலமும் இந்தி டிவி நடிகையுமான உர்ஃபி ஜாவேத் எதையாச்சும் செய்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் சினிமா பிரபலங்களையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்து வருகிறார்.

வேஸ்ட்டான பொருட்களை வைத்து வித்தியாசமாக உடையை செய்து மாட்டிக் கொண்டு ஃபேஷன் ஷோ நடத்தி வரும் உர்ஃபி ஜாவேத் தற்போது விசித்திரமாக கார் சீட்டை ஆடையாக உருவாக்கி அணிந்து கொண்டு உலா வந்த வீடியோக்களையும் புகைப்படங்களையும் பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

உர்ஃபி ஜாவேத்தின் இந்த லேட்டஸ்ட் கிறுக்குத்தனத்தை பார்த்த ரசிகர்கள் ஏகப்பட்ட ட்ரோல்களையும் மீம்களையும் போட்டுத் தாக்கி வருகின்றனர்.

டிவி நடிகையின் டார்ச்சர்

டிவி நடிகையின் டார்ச்சர்

இந்தி டிவி சீரியல் நடிகையான உர்ஃபி ஜாவேத் பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். அதன் பிறகு நடிகை சன்னி லியோன் நடத்திய ஸ்ப்லிட்ஸ் வில்லா சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டார். இணையத்தில் எப்போதுமே சென்சேஷனலாக இருக்க வேண்டும் என்பதற்காக வித்தியாசமான உடைகளை அணிந்து கொண்டும் படு ஆபாசமான உடைகளை உடுத்திக் கொண்டும் போஸ் கொடுத்து பலரையும் பதற வைத்து வருகிறார்.

விசித்திரமான உடைகள்

விசித்திரமான உடைகள்

மேலாடை அணியாமல் எதையாவது வைத்து அதனை மறைத்தால் போதும் என்றும் ஸ்மார்ட் போன், சோடா மூடி, பிளாஸ்டிக் நகங்கள், போட்டோக்கள், ஜிகினா பேப்பர், ஸ்டிக்கர் என பல வற்றை வைத்து தனது முன்னழகை மறைத்துக் கொண்டு விசித்திரமான உடைகளை ஃபேஷன் என அறிவித்து வீடியோக்கள் வெளியிடுவது மட்டுமின்றி அந்த உடையை அணிந்து கொண்டு பொதுவெளியிலும் நடமாடி வருவதால் பல சிக்கல்களை சந்தித்து வருகிறார்.

இப்போ கார் சீட்

இப்போ கார் சீட்

சட்டைக்கு பதிலாக மேலயும் ஜீன்ஸ் அணிந்து கொண்டு சமீபத்தில் சேட்டை செய்த உர்ஃபி ஜாவேத் தற்போது கார் சீட்டை கிழித்து உடையாக தைத்து அணிந்து கொண்டு அதகளம் செய்துள்ளார். பிரவுன் கலர் கார் ஷீட் டிரெஸ்ஸை பார்த்த பாலிவுட் நெட்டிசன்கள் உர்ஃபி ஜாவேத்தை வழக்கம் போல பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

பீன் பேக்

பீன் பேக்

இந்த உடையை பார்த்த ரசிகர்கள் ஏகப்பட்ட ட்ரோல் ட்வீட்களை போட்டு வருகின்றனர். பீன் பேக் போலவே உர்ஃபி ஜாவேத்தின் புதிய உடை இருப்பதாக இந்த நெட்டிசன் போட்டு கலாய்த்துள்ளார்.

எனக்கு புடிக்கல

எனக்கு புடிக்கல


I don't like that one என gif வீடியோவை போட்டு இந்த நெட்டிசன் உர்ஃபி ஜாவேத்தின் புதிய உடை தனக்கு புடிக்கவில்லை எனக் கூறி கலாய்த்துள்ளார். குயின் என்றும், ரொம்ப நல்ல க்ரியேட்டிவிட்டி என்றும் உர்ஃபி ஜாவேத்தின் ரசிகர்கள் ஜொள்ளு விட்டும் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

டாய்லெட் சீட்

டாய்லெட் சீட்

உர்ஃபி ஜாவேத்தின் மார்பு பகுதியில் இருக்கும் டிசைனை பார்த்து விட்டு இது டாய்லெட் சீட் டிரெஸ் தானே என கிண்டல் செய்து வருகின்றனர். மேலும், அடுத்த முறை டாய்லெட் சீட்டையே டிரெஸ்ஸாக மாட்டிக் கொண்டு வாங்க உர்ஃபி ஜாவேத் நல்லா இருக்கும் என உர்ஃபி ஜாவேத்துக்கு புதுசா உடை உடுத்த ஐடியாவையும் கொடுத்து வருகின்றனர். இன்னும் என்னவெல்லாம் கொடுமைகளை பார்க்க வேண்டுமோ என பல ரசிகர்கள் தலையில் அடித்துக் கொண்டு உர்ஃபி ஜாவேத்தை கன்னா பின்னாவென திட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X