Urfi Javed: என்ன கன்றாவிடா இது.. உர்ஃபி ஜாவேத்தை கிண்டலடிக்கும் பேன்ஸ்!

சென்னை: அரைகுறை ஆடையுடன் விவகாரமாக வலம் வரும் நடிகை உர்ஃபி ஜாவேத். பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், தான் பெற்றோரால் கஷ்டப்பட்டது குறித்து பேசி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது இவர் கவர்ச்சி தூக்கலாக இருக்கும் உடையை அணிந்துக்கொண்டு வலம் வந்துள்ளார். இந்த வீடியோ தற்போது டிரெண்டாகி வருகிறது.

Voot ஒடிடி தளத்தில் பிக் பாஸ் ஒடிடி நிகழ்ச்சி கலந்து கொண்ட உர்ஃபி, அந்த நிகழ்ச்சியில் ஒரு வாரம் கூட தாக்குபிடிக்க முடியாமல் வெளியேற்றப்பட்டார். ஆனால், அந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த புகழை தவறாக பயன்படுத்தி படுமோசமான உடையை அணிந்து கவர்ச்சி தாண்டவம் ஆடி வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இந்த அம்மணிக்கு உடை அணிவதே பிடிக்கவே பிடிக்காதா என்று கேட்பது போல, பேஷன் என்ற பெயரில், மார்பகத்தை மறைக்க பூ, அப்படி இல்லனா அதை மறைக்க ஸ்மார்ட் போன்களை தொங்க விட்டு கவர்ச்சி உடையில் இருக்கும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

Urfi Javed dress

ஆபாச நடிகையா: அண்மையில் ஊடகம் ஒன்றில் பேசி இருந்த இவர், நான் 11ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது, என் புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாச வெப்சைட்களில் சிலர் பதிவிட்டுவிட்டனர். அதனை பார்த்த என் குடும்பத்தினர் எனக்கு சப்போர்ட் பண்ணாமல் என் மீது சந்தேகப்பட்டனர். தற்போது என் சொந்தக்காரர்களும் என்னை ஆபாச நடிகையாகத்தான் பார்க்கின்றனர். சிலர் இன்னமும் தன்னை ஆபாச நடிகை என்றே அழைக்கிறார்கள் என்று தனது வேதனையுடன் பேசி இருந்தார்.

என்ன கன்றாவிடா இது: கவர்ச்சி வீடியோக்களையும் போட்டோக்களையும் அவ்வப்போது வெளியிட்டு வரும் உர்ஃபி ஜாவேத், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எல்இடி லைட்டில் வரும் ஒளி ஒளிரும் ஆடையை போட்டு மார்பகத்தை மறைத்தபடி வந்திருந்தார். அந்த ஆடையில் ஏர்போர்ட், க்யூன், சாரி என்ற வாசகங்கள் இடம் பெற்று இருந்தது. இதைப்பார்த்த ரசிகர்கள் என்ன கன்றாவிட இது என்றும், இதற்கு பெயர் தன் பேஷன் உடையா என்றும் கிண்டலடித்து வருகின்றனர். இருந்தாலும், இவரின் தீவிர ரசிகர்கள் வாவ் சூப்பர் உர்ஃபி ஜி என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

வெப் சிரீஸ்: இந்நிலையில் சர்ச்சைகளுக்கு பெயர் போன உர்ஃபி ஜாவத் நடித்துள்ள Follow kar lo yaar என்ற சிரீஸ் ஆகஸ்ட் 23ந் தேதியில் இருந்து அமேசான் பிரைம் வீடியோவில் பார்க்கலாம். இதில், அவரது சர்ச்சைக்குரிய ஆடைகள் குறித்து நெட்டிசன்களின் ட்ரோல்களால் உர்ஃபி வேதனைபட்டது குறித்தும், அதன் பின் அவர் எடுத்த முடிவுகள் குறித்தும் பார்க்கலாம். இதன் டீசர் அண்மையில் வெளியானது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X