தீபாவளி அதுவுமா என்ன கன்றாவிடா இது.. உர்ஃபி ஜாவேத்தை கிண்டலடிக்கும் ஃபேன்ஸ்!
சென்னை: பேப்பர், கண்ணாடி குடுவை, கலர் கலர் லைட்டு என எந்த பொருள் கிடைத்தாலும் அதை உடையாக சுற்றிக்கொண்டு கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் மீடியா முன் காட்சி கொடுப்பவர் தான் நடிகை உர்ஃபி ஜாவேத், இவர் பெரிதாக படத்தில் நடித்து பிரபலமாகவில்லை என்றாலும், அரைகுறை ஆடையுடன் தெருவில் உலாவி பிரபலமாகிவிட்டார்.
இந்தி பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு உர்ஃபி அந்த வீட்டில் கொஞ்ச நாள் கூட இவரால் தாக்கு பிடிக்க முடியாமல் வெளியேறினார். அந்த நிகழ்ச்சியில் மக்களின் அனுதாபத்தை பெற வேண்டும் என்பதற்காக இளம் வயதில் அதாவது 11ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது, என் புகைப்படத்தை மார்ஃப் செய்து ஆபாச வெப்சைட்களில் சிலர் பதிவிட்டு விட்டனர். அதனை பார்த்த குடும்பத்தினர் எனக்கு சப்போர்ட் பண்ணாமல் என் மீது சந்தேகப்பட்டனர். தற்போது தன் சொந்தக்காரர்கள் தன்னை ஆபாச நடிகையாக பார்த்தனர்.ஆபாச நடிகை என்றே தன்னை அடித்து அப்பா வீட்டை விட்டே விரட்டி விட்டார் என அழுது புலம்பினார். இவர் என்ன தான் அழுது புலம்பினாலும், போம்மா தாயே என ரசிகள் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

வெளியே வந்த உர்ஃபி பல விதமான கவர்ச்சி உடையில் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களை இஷ்டத்துக்கு அதிகரித்து வருகிறார். இவர் பதிவிடும் போட்டோக்களை பார்க்கும் போது இந்த பொண்ணுக்கு டிரஸ் போடவே பிடிக்காதா என்று கேட்கும் அளவுக்கு படு மோசமான உடையாக இருக்கும். அப்படி எதையாவது செய்து லைக்குகளை பெரும் நடிகைகள் வரிசையில் முதலாவதாக இருக்கிறார் நடிகை உர்ஃபி ஜாவேத். இவரை முழுசான உடை அணிந்து யாரும் பார்த்து இருக்கவே முடியாது. வித்தியாசமாக எதையோ செய்கிறேன் என்று, கன்றாவியான போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவர் கருப்பு உடையில் எல்லா இடமும் கிழிந்து இருக்கும் உடையை அணிந்து தங்கையுடன் போஸ் கொடுத்துள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இதுக்கு பேரு பேஷனா என்றும், தீபாவளி அதுவுமா என்ன கன்றாவிடா என்றும் கேட்டு வருகின்றனர். ஆனால் அம்மணியோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் இணையத்தில் இவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தொடர்ந்து இதுபோன்ற உடையிலேயே காட்சி கொடுத்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











