பைத்தியமா இவ.. முன்னாடி டிரெஸ்.. பின்னாடி காலி.. பிக் பாஸ் பிரபலத்தை மரண ட்ரோல் செய்யும் ஃபேன்ஸ்!
மும்பை: அமெரிக்காவுக்கு போக வடிவேலுவிடம் வழி கேட்கும் காமெடியில் முன்னாடி பார்க்க பக்கா ஜென்டில் மேன் போல டிரெஸ் அணிந்து கொண்டும் ஆனால், பின்னால் டிரெஸ்ஸை கிழித்து விட்டுக் கொண்டிருக்கும் பைத்தியக்காரனை போல பிக் பாஸ் பிரபலம் உர்ஃபி ஜாவேத் ஃபேஷன் என்கிற பெயரில் அணிந்துள்ள மோசமான உடையை பார்த்த ரசிகர்கள் அவரை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
கிறுக்குத்தனமாக எதையாவது செய்து லைம் லைட்டில் இருந்துக் கொண்டே இருக்க வேண்டும் என கவர்ச்சியாக செய்கிறேன் என்கிற பெயரில் லூசுப்பெண்ணாகவே மாறிவிட்டார் உர்ஃபி ஜாவேத்.
மேலாடை இல்லாமல் எதையாவது வைத்து மார்பை மறைத்து வந்த உர்ஃபி ஜாவேத் இப்போ மேலாடை எல்லாம் முன் பக்கம் இருக்கு, ஆனால், பின்னாடி தான் மருதமலை படத்தில் திறந்து விட்ட கதவு போல காலியா இருக்கு என்கிற ரீதியில் ட்ரோல்கள் பறக்கின்றன.

பிக் பாஸ் பிரபலம்
இந்தி பிக் பாஸ் ஓடிடியில் போட்டியாளராக கலந்து கொண்டு 24 மணி நேரமும் பெரும் சர்ச்சைகளை கிளப்பி ஒட்டுமொத்த ரசிகர்களின் பார்வையையும் தன் பக்கம் வரவழைக்க ஏகப்பட்ட வேலைகளை செய்த டிவி நடிகை உர்ஃபி ஜாவேத் அதன் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து இனிமேல் தனது ரூட் இதுதான் என கவர்ச்சியிலும் சர்ச்சை பாதையை தேர்வு செய்து தொடர்ந்து பயணித்து வருகிறார்.

சன்னி லியோன் நிகழ்ச்சியில்
கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடத்தி வரும் ஸ்ப்லிட்ஸ் வில்லா நிகழ்ச்சியில் போட்டியாளராக தற்போது வலம் வரும் உர்ஃபி ஜாவேத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் தாறுமாறு கவர்ச்சி போட்டோக்களையும் வித விதமான வித்தியாச உடைகளையும் அணிந்து கொண்டு போட்டோக்களையும் வீடியோக்களையும் போட்டுத் தாக்கி வருகிறார்.

என்ன பின்னாடி டிரெஸ்ஸை காணோம்
முன்னாடி நல்லா வெள்ளை சட்டை, கருப்பு பேன்ட் உடன் போதாக்குறைக்கு கழுத்தில் டை அணிந்து கொண்டு ஜென்டில் உமன் போல இருக்கும் உர்ஃபி ஜாவேத் கண்ணாடியில் தனது உண்மையான நிலமையை வெளிச்சம் போட்டுக் காட்டி ரசிகர்களை பதற வைத்துள்ளார். பின்னாடி டிரெஸ் என்னம்மா இப்படி கிழிஞ்சிருக்கு என டோட்டல் பாலிவுட்டே ஷாக் ஆகி விட்டது.

குவியும் ட்ரோல்கள்
நம்ம ஊர் ரசிகர்கள் இதை பார்த்தால் இந்நேரம் வடிவேலு பட காமெடி மீம்களை போட்டுக் கலாய்த்திருப்பார்கள். இந்தி டிவி நடிகை என்பதால் பாலிவுட்டிலும் இதே போல படங்களில் இடம்பெற்ற காமெடி காட்சிகளை போட்டு உர்ஃபி ஜாவேத்தை மரண ட்ரோல் செய்து வருகின்றனர்.
லாக்டவுன் எஃபெக்ட்
லாக்டவுன் எஃபெக்ட் என்றும் ஆன்லைன் மீட்டிங்கிற்கு ஏற்ற சரியான உடை இது என்றும் உர்ஃபி ஜாவேத்தின் லேட்டஸ்ட் உடையை பார்த்து ஏகப்பட்ட ப்ளூ டிக் பிரபலங்களே பங்கமாக கலாய்த்து வருகின்றனர். உடை அணிவதில் உர்ஃபி ஜாவேத் இன்னும் என்னவெல்லாம் ஐடியா வச்சிருக்காருன்னு தெரியலையே என கிண்டல் செய்து வருகின்றனர்.

பெஸ்ட் ஃபிரண்ட் முன்னாடி
பாய் ஃபிரண்டு முன்னாடி இப்படியும், பெஸ்ட் ஃபிரண்டு முன்னாடியும் இப்பலாம் பெண்கள் இப்படித்தான் இருக்காங்க என உர்ஃபி ஜாவேத்தின் போட்டோவை போட்டு ஏகப்பட்ட மீம்களை க்ரீயேட் செய்து ரசிகர்கள் வேறலெவலில் கலாய்த்து வருகின்றனர். பைத்தியமாவே ஆகிட்டாங்க போல என்றும் சீக்கிரம் மனநல மருத்துவமனையில் சேர்த்துடுங்க என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











