Don't Miss!
- News
"கேக் வாக்".. ஓபிஎஸ் சொன்ன வார்த்தையால்.. திக்கு முக்காடி போன திமுக.. காங்கிரசும் குஷியாம்.. போச்சே!
- Technology
கேப் விடாமல் தூள் கிளப்பும் ரெட்மி: மொத்த பேரின் கவனத்தையும் ஈர்க்கும் டர்போ ஸ்மார்ட்போன்!
- Lifestyle
வார ராசிபலன் 22.01.2023-28.01.2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்...
- Finance
அம்பானி குடும்பத்தின் மருமகள்கள், மருமகன்.. யாரு பெஸ்ட்..?!
- Sports
"யார்பா அது முரட்டு ஆளா ஓடுற" ரோகித்தை முட்டி தள்ளிய பாதுகாவலர்.. 2வது ODIல் சுவாரஸ்ய நிகழ்வு!
- Automobiles
மாருதி கார் மட்டும்தான் மைலேஜ் தருமா? களத்தில் இறங்கிய டாடா! கூடவே பாதுகாப்பாகவும் இருக்க போகுது!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
பசங்கள கெடுக்கிறா.. பிக் பாஸ் நடிகையை விளாசிய சேத்தன் பகத்.. வாட்ஸ்அப் லீலைகளை அம்பலப்படுத்திய நடிகை
மும்பை: பாலிவுட்டின் யங் பாம்ஷெல் நடிகை உர்ஃபி ஜாவேத் வித விதமான பிகினி உடைகளை அணிந்து கொண்டும், டாப்லெஸ் ஆக போஸ் கொடுத்தும் இணையத்தில் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரபல எழுத்தாளர் சேத்தன் பகத் பிக் பாஸ் பிரபலம் உர்ஃபி ஜாவேத்தை வக்கிரம் பிடித்தவர் என பேசியது பெரிய சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில், மீடூ சர்ச்சையின் போது வலம் வந்த சேத்தன் பகத்தின் லீலைகளை புட்டு புட்டு வைத்து பதிலடி கொடுத்துள்ளார் உர்ஃபி ஜாவேத்.
யங் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் குஷ்பு..எலும்பும் தோலுமாக ஆளே அடையாளம் தெரியல புலம்பும் ரசிகர்கள்!

2 ஸ்மார்ட்போன் 1 சார்ஜர்
பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் சீரியல் நடிகை உர்ஃபி ஜாவேத். பாலிவுட்டில் சன்னி லியோன், ஊர்வசி ரவுத்தேலா, பூனம் பாண்டே உள்ளிட்டவர்களுக்கே கடும் டஃப் போட்டியாக மாறி கவர்ச்சி கடலில் ரசிகர்களை மூழ்க வைத்துள்ளார். சமீபத்தில் 2 ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஒரு சார்ஜர் ஒயரை கொண்டு உள்ளாடையை உருவாக்கி அணிந்து கொண்டு வெளியே நடமாடிய வீடியோ பலரையும் ஷாக் ஆக்கியது.

பொது இடங்களுக்கே
வெறும் போட்டோஷூட் எல்லாம் நடத்தாமல் வீடியோவையே வெளியிடும் உர்ஃபி ஜாவேத் அப்படியே அந்த கவர்ச்சி உடையுடன் பொது இடங்களுக்கும் சினிமா நிகழ்ச்சிகளுக்கும் வருகை தந்து ஒட்டுமொத்த பேரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி வருகிறார். உர்ஃபி ஜாவேத் மீது ஏகப்பட்ட பாலிவுட் நடிகைகளே பொறாமையில் உள்ள நிலையில், பிரபல எழுத்தாளர் சேத்தன் பகத் தேவையில்லாமல் வாய்க் கொடுத்து மாட்டிக் கொண்டார்.

வக்கிரம் புடிச்சவ
இன்ஸ்டாகிராமில் பெண்கள் இப்ப ரொம்பவே மோசமாக டிரெஸ் என்கிற பெயரில் எதையோ ஒன்றை உடுத்திக் கொண்டு போட்டோக்களையும், வீடியோக்களையும் போட்டு வருகின்றனர். உர்ஃபி ஜாவேத்துன்னு ஒரு பாப்பா இருக்கு அது ரொம்பவே வக்கிரம் புடிச்ச பொண்ணு இளைஞர்களின் கவனத்தை அதிகம் கெடுத்து வருகிறது. அதன் ஒரு போஸ்ட்டுக்கு கோடிக்கணக்கில் லைக்குகளை இளைஞர்கள் போட்டு வருகின்றனர்.

இளைஞர்களை கெடுக்கிறா
ஒரு பக்கம் நம் நாட்டின் இளைஞர்கள் ராணுவத்தில் பணியாற்றி நாட்டுக்காக சேவை செய்து வருகின்றனர். இன்னொரு பக்கம் ஸ்கூல் பசங்க, காலேஜ் பசங்களை எல்லாம் இந்த பொண்ணு ரொம்பவே கெடுத்து வருகிறாள் என போகிற போக்கில் பேசிய நிலையில், தற்போது உர்ஃபி ஜாவேத் சேத்தன் பகத்தை உண்டு இல்லை என ஆக்கி உள்ளார்.

மீடூ லீலைகள்
மீடூ சர்ச்சை நாடு முழுவதும் வெடித்த போது நடிகைகளிடம் நீங்க ஆபாசமாக செய்த சாட் ஸ்க்ரீன் ஷாட்கள் எல்லாம் வலம் வர மன்னிப்பு கேட்டீங்களே, அதை எல்லாம் மறந்துட்டீங்களா சேத்தன் என அந்த ஸ்க்ரீன் ஷாட்டுகளையும் செய்திகளையும் எடுத்துப் போட்டு யாரு வக்கிரவாதி நீங்களா? நானா? என அசிங்கமாகவே திட்டி விட்டார்.

பெரிதான பிரச்சனை
பெண்களின் ஆடையை பற்றி யாருமே விமர்சிக்கக் கூடாது என்றும் நான் எப்படி வேண்டுமானாலும் என் இஷ்டத்துக்கு டிரெஸ் பண்ணுவேன் என்றும் உர்ஃபி ஜாவேத் பதிலடி கொடுத்துள்ளார். உர்ஃபி ஜாவேத்தின் செயலால் கோபமான சேத்தன் பகத் ரசிகர்கள் ஏகப்பட்ட ஆபாச ட்ரோல்களையும் கமெண்ட்டுகளையும் போட்டு வருகின்றனர். அதே சமயத்தில் சேத்தன் பகத்துக்கு எதிராகவும் கண்டன கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.