Uriyadi 2 Teaser: அரசியல்ல நாம தலையிடனும்.. இல்ல அரசியல் நம்ம வாழ்க்கையில தலையிடும்.. உறியடி2 டீசர்
அனல் பறக்கும் வசனங்களுடன் உறியடி 2 படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
Recommended Video

சென்னை: உறியடி 2 படத்தின் டீசரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.
விஜயகுமார் இயக்கி நடித்த படம் உறியடி. கல்லூரியில் படிக்கும் நான்கு நண்பர்களுக்குள் நடக்கும் நிகழ்வுகளை வைத்து, கல்வி நிறுவனங்களில் எப்படி எல்லாம் சாதி வேற்றுமை பார்க்கப்படுகிறது என்பதை நச்சென பேசியிருப்பார் இயக்குனர்.
உறியடி முதல் பாகம் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. வியாபாரத்தில் நல்ல வருவாயை ஈட்டித்தந்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை நடிகர் சூர்யா, தனது 2டி நிறுவன பேனரில் தயாரிக்கிறார்.

சூர்யா வெளியிட்ட டீசர்
இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் இன்று காலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு, நடிகர் சூர்யா படத்தின் டீசரை வெளியிட்டார்.

அனல் பறக்கும் வசனங்கள்
உறியடி முதல் பாகத்தை போலவே, இதிலும் வசனங்கள் அனல் பறக்கின்றன. 'சமூகத்தின் சமநிலை தவறும் போதெல்லாம், சகலமும் அவலமாகும். மனிதத்தன்மை கேள்விக்குறியாகும்', 'பொறுமை காத்தால் உடமை பறிபோகும்', 'உரிமை காக்க போராடுவதே கடமை','அரசியல்ல நாம தலையிடனும்... இல்ல அரசியல் நம்ம வாழ்க்கையில தலையிடும்', என வசனங்கள் தெறிக்கவிடுகின்றன.

டெம்போவை கூட்டும் இசை
அதேபோல் இசையும் காட்சிகளின் டெம்போவை ஏற்றுகிறது. டீசரை பார்க்கும் போதே இது ஒரு இளைஞர்களுக்கான அரசியல் படம் என்பது தெளிவாகிறது.

இயக்குனர் விஜயகுமார்
உறியடி 2 படத்தை இயக்கி, நாயகனாக நடித்துள்ளார் இயக்குனர் விஜய்குமார். படம் விரைவில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறுது. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கு விஜயகுமார் தான் வசனம் எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











