Uriyadi 2: உறியடி 2 உங்களை சந்தோஷப்படுத்தாது. ஆனால்.... சூர்யா பரபரப்பு பேச்சு!
உறியடி 2 திரைப்படம் அனைவரையும் சிந்திக்க வைக்கும் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
சென்னை: உறியடி 2 திரைப்படம் யாரையும் சந்தோஷப்படுத்தாது என அப்படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
விஜயகுமார் இயக்கி நடித்த உறியடி, கல்வி நிறுவனங்களில் உள்ள சாதிய பாகுபாடுகளை பற்றி பேசியது. இப்படம் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை விஜயகுமார் இயக்கி, நடித்துள்ளார். இதனை நடிகர் சூர்யா, தனது 2டி நிறுவன பேனரில் தயாரித்துள்ளார். சென்னை சத்யம் திரையரங்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் படத்தின் டீசரை சூர்யா வெளியிட்டார்.
பின்னர் பேசிய அவர், உறியடி 2 யாரையும் சந்தோஷப்படுத்தாது எனக் குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் பேசியதாவது,

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா
" இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, உறியடி 2 படத்தில் இரண்டு பாடல்களை பாடியுள்ளார். எங்கள் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் அவர் முதன்முதலாக பாடியிருப்பது மகிழ்ச்சி.

சீனியராகிவிட்டேன்
எனது அருகில் உட்கார்ந்திருந்த ஒருத்தர், காக்க காக்க திரைப்படம் வந்த போது தான் 3ம் வகுப்பு படித்ததாகக் கூறினார். ஆஹா நமக்கு வயது அதிகமாகி வருகிறதே என அப்போது யோசித்தேன். தமிழ் சினிமாவின் நான் சீனியராகி வருவதை உணர்ந்தேன்.

விஜயகுமாரின் உண்மை
உறியடி படம் வெளிவந்து நான்கைந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் ஏன் விஜயகுமாரின் அடுத்த படைப்பு வெளிவரவில்லை என்ற கேள்வி நம்முள் எழும். சினிமா பின்புலம் இல்லாமல், இங்கு ஜெயித்து காட்டியிருக்கிறார் விஜயகுமார். அதற்கு காரணம் அவரிடம் இருக்கும் உண்மை.

மகிழ்ச்சி அடைகிறேன்
உறியடி 2ம் பாகமும் அவருடைய உண்மையான படைப்பாக இருக்கும். படத்தில் அவர் உண்மையை பேசியுள்ளார். இப்படி ஒரு உண்மையான படைப்பில் எனது பெயரும் இருப்பதில் மகிழ்ச்சி.

சந்தோஷப்படுத்தாது
உறியடி 2 திரைப்படம் நிச்சயம் யாரையும் சந்தோஷப்படுத்தாது. ஆனால் அனைவரையும் சிந்திக்க வைக்கும். அப்படியான ஒரு படமாக தான் உறியடி 2 உருவாகியுள்ளது", என அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications











