ஆக்சன் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் உறியடி புகழ் நடிகர் விஜயகுமார். இயக்குனர் இவர்தானாமே!

சென்னை : இயக்குனரும் நடிகருமான விஜயகுமார் உறியடி என்ற திரைப்படத்தை இயக்கி நடித்திருந்த நிலையில் சமீபத்தில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்தில் வசனமும் எழுதி இருக்கிறார்.

தனது ஒவ்வொரு திரைப்படங்களின் மூலம் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய தாங்களைத் தொடர்ந்து படங்களில் காட்சிப்படுத்தி வரும் இவருக்கு தமிழ் ரசிகர்களிடையே பெரும் மதிப்பு இருந்து வருகிறது.

உறியடி, உறியடி 2 உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து இப்பொழுது ஆக்சன் ஹீரோ அவதாரம் எடுத்திருக்கும் விஜயகுமார் நடிக்கும் புதிய திரைப்படத்தை இவரது உதவி இயக்குனர் அப்பாஸ் இயக்க உள்ளார்.

புதுப்புது கதைகள்

புதுப்புது கதைகள்

சமீப காலமாகவே தமிழ் சினிமாவில் திறமை வாய்ந்த இளம் இயக்குனர்கள் நடிகர்கள் வருகை மிக அதிகமாக இருந்து வரும் நிலையில் புதுப்புது கதைகள் தொடர்ந்து வெளியாகி தமிழ் ரசிகர்களை திருப்தி படுத்தி வருவதோடு வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெறுகிறது.

மிரட்டும் சண்டைக்காட்சிகள்

மிரட்டும் சண்டைக்காட்சிகள்

இந்த வகையில் தமிழ்த் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்த உறியடி திரைப்படத்தை இயக்கி நடித்திருந்த விஜயகுமார் இதில் பலரும் சொல்லத் தயங்கும் சமூக அவலங்களை தைரியமாக கூறியதோடு, ஒவ்வொரு காட்சியிலும் பரபரப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் அமைந்திருந்த மிரட்டும் சண்டைக்காட்சிகள் பார்க்கும் அனைவரின் ஹார்ட் பீட்டையும் பதம் பார்த்தது.

பிரச்சனையை கையில் எடுத்து

பிரச்சனையை கையில் எடுத்து

உறியடி படத்தை பார்த்து அசந்து போன நடிகர் சூர்யா தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் உறியடி பாகம் 2 தயாரிக்க அதிலும் விஜயகுமார் சமூகத்திற்குத் தேவையான மிக முக்கியமான பிரச்சனையை கையில் எடுத்து மிக தைரியமாக கூறியதோடு அதில் கதாநாயகனாகவும் நடித்திருப்பார்.

 வசனம் எழுதி

வசனம் எழுதி

இவ்வாறு தொடர்ந்து இரண்டு திரைப்படங்களில் நடித்து அனைவரையும் மிரட்டி இருந்த விஜயகுமார் யாரும் சற்றும் எதிர்பாராத நிலையில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவின் மிரட்டலான நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகி சக்கைபோடு போட்ட சூரரைப்போற்று திரைப்படத்தில் வசனம் எழுதியிருக்க அவை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு சமூக வலைதளங்களில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு ட்ரெண்ட் ஆகின.

உதவி இயக்குனர் அப்பாஸ்

உதவி இயக்குனர் அப்பாஸ்

தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய நடிகராகவும் இயக்குனராகவும் இருந்து வரும் விஜயகுமார் ரீல் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் ஆக்சன் ஹீரோ அவதாரம் எடுக்க இந்த திரைப்படத்தை உறியடி மற்றும் உறியடி 2 படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த அப்பாஸ் இயக்க உள்ளார்.

Recommended Video

Surya movie Vs real life | Suriya | Kaappaan | 7 Aum Arivu
விரைவில் வெளியாகும்

விரைவில் வெளியாகும்

சூரரைப்போற்று திரைப்படத்திற்குப் பிறகு விஜயகுமாரின் படங்களின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் இப்பொழுது ஆக்சன் ஹீரோ அவதாரம் எடுத்திருக்கும் இத்திரைப்படத்தின் அடுத்தகட்ட அப்டேட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, இதில் நடிக்கும் இதர நடிகர் நடிகைகளின் பட்டியல் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X