twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிவ சேனாவில் இணைகிறார் பிரபல நடிகை ஊர்மிளா மடோன்கர்.. கட்சியின் சேரும் முன்பே தேடி வந்த பதவி!

    By
    |

    மும்பை: இந்தி நடிகை ஊர்மிளா மடோன்கர், சிவசேனா கட்சியில் இணைகிறார்.

    பிரபல இந்தி நடிகை ஊர்மிளா மடோன்கர். தமிழ், மலையாளம், மராத்தி உட்பட பல்வேறு மொழிப் படங்களில் நடித்துள்ளார்.

    தமிழில், கமல்ஹாசனின் இந்தியன், சாணக்கியன் படங்களிலும் நடித்துள்ளார்.

    ரங்கீலா நாயகி

    ரங்கீலா நாயகி

    இந்தியில் ரங்கீலா, சத்யா, ஏக் ஹசீனா தீ, பூட் உட்பட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள ஊர்மிளா, கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் காங்கிரஸ் கட்சியில் திடீரென இணைந்தார். சேர்ந்த சில நாட்களிலேயே அவருக்கு
    நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது.

    தோல்வி அடைந்தார்

    தோல்வி அடைந்தார்

    இதையடுத்து மும்பை வடக்கு நாடாளுமன்றத் தொகுதியில் அந்தக் கட்சியின் சார்பில் போட்டியிட்டார். ஆனால், பாஜக வேட்பாளரிடம் அதிக ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். கட்சிக்குள் தனக்கு எதிராக சிலர் செயல்பட்டதாகவும் அதனாலேயே தான் தோற்றதாகவும் அப்போது அவர் பரபரப்பு புகார் கூறியிருந்தார்.

    சிவ சேனா கட்சி

    சிவ சேனா கட்சி

    பின்னர், அந்தக் கட்சியில் இருந்து திடீரென விலகினார். இதையடுத்து அவர் பாஜகவில் இணைவார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அவர் சிவசேனா கட்சியில் சேர இருக்கிறார். மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் அவர் மகனும்
    அமைச்சருமான ஆதித்யா ஆகியோர் முன்பு, அவர் அந்தக் கட்சியில் இணைய இருக்கிறார்.

    சட்ட மேலவை

    சட்ட மேலவை

    அவருக்கு அந்தக் கட்சி, அதற்குள் சட்டமேலவை உறுப்பினர் வாய்ப்பை வழங்கியுள்ளது. ஆளுநர் ஒதுக்கீட்டில் ஊர்மிளா உள்ளிட்ட 12 பேரை சட்ட மேலவை உறுப்பினர்களாக நியமிக்க சிவசேனா கட்சி பரிந்துரைத்துள்ளது. இதற்கு ஆளுநர் கோஷியாரி ஓப்புதல் வழங்கியுள்ளார்.

    English summary
    Actor Urmila Matondkar set to join Shiv Sena in presence of Maharashtra CM Uddhav Thackeray
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X