பிரபல நடிகையின் சோசியல் மீடியா கணக்கை முடக்கிய மர்ம நபர்கள்.. சைபர் கிரைமில் பரபரப்பு புகார்!
மும்பை: பிரபல நடிகையின் இன்ஸ்டா கணக்கை மர்மநபர்கள் சிலர் ஹேக் செய்துள்ளனர். இதையடுத்து அவர் சைபர் கிரைமில் புகார் செய்துள்ளார்.
தமிழ், மலையாளம், மராத்தி உட்பட பல்வேறு மொழிப் படங்களில் நடித்துள்ளார், இந்தி நடிகை ஊர்மிளா மடோன்கர்.
தமிழில், கமல்ஹாசனின் இந்தியன், சாணக்கியன் படங்களில் நடித்திருக்கிறார்.

நாடாளுமன்ற தேர்தல்
இந்தியில் ரங்கீலா, சத்யா, ஏக் ஹசீனா தீ, பூட் உள்பட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள ஊர்மிளா, கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சேர்ந்த சில நாட்களிலேயே அவருக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது.

தோல்வி அடைந்தார்
இதையடுத்து மும்பை வடக்கு நாடாளுமன்றத் தொகுதியில் அந்தக் கட்சியின் சார்பில் போட்டியிட்டார். பாஜக வேட்பாளரிடம் அதிக ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். கட்சிக்குள் தனக்கு எதிராக சிலர் செயல்பட்டதாகவும் அதனாலேயே தோற்றதாகவும் அப்போது கூறியிருந்தார். பின்னர், அந்தக் கட்சியில் இருந்து திடீரென விலகினார்.

இன்ஸ்டா கணக்கு
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அவர் சிவசேனா கட்சியில் சேர்ந்தார். அவருக்கு அந்தக் கட்சி, சட்டமேலவை உறுப்பினர் வாய்ப்பை வழங்கியுள்ளது. சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்ட்டிவாக இருப்பவர் அவர். அவருடைய இன்ஸ்டா கணக்கை மர்மநபர்கள் சிலர் முடக்கி விட்டனர்.

கணக்கு மீட்பு
இதுபற்றி அவர் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். பின்னர் சைபர் கிரைம் போலீசில் எழுத்துப்பூர்வமாக அவர் புகார் அளித்தார். பின்னர் அவர் கணக்கு மீட்கப்பட்டு விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சமீபகாலமாக நடிகர், நடிகைகள் உள்ளிட்ட சினிமா பிரபலங்களின் கணக்குகள் முடக்கப்பட்டு வருகின்றன.

வரலட்சுமி
சமீபத்தில், நடிகை வரலட்சுமி சரத்குமாரின் சமூக வலைதளக் கணக்குகள் முடக்கப்பட்டன. இதுபற்றி அவர் அறிக்கை மூலமாகத் தெரிவித்தார். பின்னர் மீட்கப்பட்டது. இதையடுத்து தடம், தாராள பிரபு பட ஹீரோயின் தன்யா ஹோப், சோசியல் மீடியா கணக்கும் முடக்கப்பட்டிருந்தது


Click it and Unblock the Notifications











