சர்ச்சையை கிளப்பிய ஆபாசப் பட நடிகை கமெண்ட். ஆதரவு அளித்த நிஜ இந்தியர்களுக்கு நன்றி சொன்ன ஊர்மிளா!

மும்பை: 'ஆபாசப் பட நடிகை' என்று நடிகை கங்கனா ரனாவத் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனக்கு ஆதரவு தெரிவித்த நிஜ இந்தியர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி என பிரபல நடிகை ஊர்மிளா ட்வீட் செய்துள்ளார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண விவகாரத்தில் ஒட்டுமொத்த பாலிவுட்டையும் எதிர்த்து வருகிறார் நடிகை கங்கனா ரனாவத்.

நடிகை கங்கனாவின் கருத்துக்கு அவ்வப்போது எதிர்ப்பு தெரிவிக்கும் பிரபலங்களுடனும் வார்த்தை போரில் ஈடுபட்டு வருகிறார்.

பாஜகவில் சீட்

பாஜகவில் சீட்

மும்பையில் போதைப் பொருள் புழக்கம் அதிகமாக இருக்கிறது என மகாராஷ்ட்ரா அரசுடன் மல்லுக்கு நின்று வரும் கங்கனா ரனாவத்திடம் உங்க ஊரான இமாச்சல் தான் போதைப் பொருளின் தாயகம் என்று நடிகையும் அரசியல்வாதியுமான ஊர்மிளா மடோன்கர் கூறியிருந்தார். மேலும், பாஜகவில் சீட் கிடைக்கவே இப்படி அவர் போராடி வருகிறார் என்றார்.

ஆபாசப் பட நடிகை

ஆபாசப் பட நடிகை

ரங்கீலா, இந்தியன் என ஏகப்பட்ட படங்களில் நடித்த நடிகை ஊர்மிளா மடோன்கருக்கு நடிக்கவே தெரியாது என்றும் அவர் கிளாமர் காட்டியே சினிமா வாழ்க்கையை ஓட்டினார், அவர் ஒரு Soft Porn நடிகை என கங்கனா ரனாவத் சமீபத்தில் அவருடன் வார்த்தை போரில் ஈடுபட்டது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.

குஷ்பு ஆதரவு

குஷ்பு ஆதரவு

கங்கனா ரனாவத்தின் கமெண்ட்டை தொடர்ந்து பாலிவுட் முதல் கோலிவுட் வரை ஏகப்பட்ட பிரபலங்கள் நடிகை ஊர்மிளாவுக்கு ஆதரவாக தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். நடிகை குஷ்பு, இப்போ இருக்கும் நடிகைகள் எல்லாம் கனவில் கூட நினைத்து பார்க்காத பல சாதனைகளை ஊர்மிளா செய்துள்ளார். அவரை ஆபாச பட நடிகையுடன் ஒப்பிடுவதா என கங்கனாவுக்கு எதிராக ட்வீட் போட்டார்.

நிஜ இந்தியர்களுக்கு நன்றி

நிஜ இந்தியர்களுக்கு நன்றி

பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர், சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா, குஷ்பு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிகை ஊர்மிளாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நிலையில், எனக்காக குரல் கொடுத்த உண்மையான இந்திய மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் என்றும், கங்கனா பக்கம் சாயாமல் தனக்கு ஆதரவு அளித்த மீடியாக்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X