உறுமீன் கேமை வெளியிட்டார் ஆர்யா!
பாபி சிம்ஹா நடித்துள்ள உறுமீன் படத்தின் கேமை வெளியிட்டார் நடிகர் ஆர்யா.
சமீப காலமாக தமிழ் சினிமா படங்களுக்கும் கேம்கள் வெளியாகி வருகின்றன.
ரஜினி நடித்த கோச்சடையானுக்கு ஒரு கேம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

அதன் பிறகு விஜய் நடித்த கத்தி, புலி படங்களுக்கும் கேம்கள் வெளியாகி வரவேற்பு பெற்றன. சூர்யாவின் ‘அஞ்சான்' படத்துக்கும் கேம் வெளியானது. அந்த வரிசையில் தற்போது பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகியுள்ள ‘உறுமீன்' படத்தின் பிரிடிக்சன் கேமும் வெளியாகியுள்ளது.
இந்த பிரிடிக்சன் கேம்-ஐ நடிகர் யா வெளியிட்டார். இந்த கேமில் உங்கள் பிறந்த தேதியை கொடுத்தால் உங்களது பூர்வ ஜென்மத்தில் என்னவாக இருந்தீர்கள், அடுத்த ஜென்மத்தில் என்னவாக இருப்பீர்கள் என்பது தெரிந்துவிடும்.
‘உறுமீன்' படத்தில் பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சக்திவேல் பெருமாள்சாமி இயக்கியுள்ள இப்படத்திற்கு அச்சு இசையமைத்துள்ளார். இப்படத்தை டிசம்பர் 4-ம் தேதி தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது.


Click it and Unblock the Notifications











