twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாபி சிம்ஹா,ரேஷ்மி மேனன் (காதலர்களின்) நடிப்பில் உறுமீன்.. டிசம்பர் 4 முதல்

    By Manjula
    |

    சென்னை: பாபி சிம்ஹா - ரேஷ்மி மேனன் நடிப்பில் உருவாகியிருக்கும் உறுமீன் திரைப்படம் டிசம்பர் 4ம் தேதியன்று வெளியாகிறது.

    நடிகர் பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன், கலையரசன், அப்புக்குட்டி,காளி வெங்கட் மற்றும் சன்னி லியோன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் உறுமீன்.

    Urumeen Release Date Here

    புதுமுக இயக்குநர் சக்திவேல் பெருமாள்சாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைத்திருக்கிறார்.

    இந்தப் படத்தில் நடிக்கும்போது பாபி சிம்ஹா - ரேஷ்மி மேனன் இருவருக்கும் இடையில் உண்டான காதல் தற்போது நிச்சயதார்த்தத்தில் வந்து முடிந்திருக்கிறது.

    இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது. ஆக்ஷன் திரில்லராக உருவாகி இருக்கும் உறுமீன் திரைப்படம் சுமார் 6 கோடி செலவில் உருவாகியிருக்கிறது.

    இந்நிலையில் படத்தின் இயக்குநர் சக்திவேல் பெருமாள்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் "வருகின்ற 4ம் தேதியில் வெளியாகிறது. ஒரு அதிரடி ஆக்ஷன் பயணத்திற்கு தயாராக இருங்கள்" என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

    English summary
    Debutante Director Sakthivel Perumalsamy Tweeted "URUMEEN from DECEMBER 4th..get ready for the action ride".
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X