Urvashi: ஊர்வசி காலில் விழுந்த கமல்ஹாசன்.. படப்பிடிப்பில் நடந்த சம்பவம்.. எதுக்கு தெரியுமா?
சென்னை: அண்மையில் அறிவிக்கப்பட்ட 71 வது தேசிய விருதுகளில் சிறந்த துணை நடிகைக்கான விருது நடிகை ஊர்வசிக்கு அறிவிக்கப்பட்டது. தனக்கு விருது அறிவிக்கப்பட்டது, மகிழ்ச்சி என்றாலும், தேர்வுக் குழுவை சராமாரியான கேள்விகளால் துளைத்து எடுத்துவிட்டார் ஊர்வசி. அதாவது, எதன் அடிப்படையில் ஷாரூக்கான் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டார்?, விஜயராகவனை எப்படி சிறந்த துணை நடிகராக தேர்வு செய்தார்கள்? என்ன அடிப்படை என்று எல்லாம் கேள்வி கேட்டு விலாசிவிட்டார். இந்நிலையில் அவர் நீயா நானா கோபிநாத்திற்கு அளித்த பேட்டி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த பேட்டியில் அவர் பல சுவாரஸ்மான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். சினிமாவில் ஊர்வசி எப்போது என்ன செய்வார் என கணிக்கவே முடியாது என்று கமல்ஹாசன் கூறியது உண்மைதான் போல எனக் கூறும் அளவுக்கு, ஊர்வசி தனது திரைப்பயணம், தனிப்பட்ட வாழ்க்கை, சமூகம் பற்றிய கருத்துக்கள் என பல விஷயங்களைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
பத்து வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பதின்மூன்று வயதில் கதாநாயகியாக உயர்ந்தது எப்படி என்பதையும் அவர் விளக்கினார். "முந்தானை முடிச்சு" படத்தில் நடித்தபோது தனக்கு 13 வயது. நான் 9ஆம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தபோது, பள்ளித் தேர்வுகள் நடந்துகொண்டிருந்த கால கட்டத்தில்தான் படப்பிடிப்பும் நடைபெற்றது. எப்படியோ தேர்வுகளை எழுதி 10ஆம் வகுப்பு சென்றேன். அப்போது முந்தானை முடிச்சு படம் வெளியாகிவிட்டது. இப்படி இருக்கும்போது, அந்த படத்தில் இடம் பெற்ற பாடலான கண்ணைத் திறக்கனும் சாமி என பாடிக் கொண்டு பசங்க என் பின்னால் சுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

காலில் விழுந்த கமல்: கமல்ஹாசன் சாருடன் நான் நடித்த படமான மைக்கேல் மதன காமராஜன் படத்தின் ஒரு காட்சி முதல் நாள் ரிகர்சல் பார்க்கப்பட்டது. ஒருமுறை ரிகர்சல் பார்த்ததும் கமல் சார் பேக்-அப் எனக் கூறிவிட்டார். அடுத்தநாள் ஸ்பாட்க்கு வந்ததும் டேக் எனக் கூறிவிட்டார்கள். எனக்கு பாதி மறந்துவிட்டது. ஆனால் டேக்கில் நான் எப்படியோ நடித்துவிட்டேன். கமல் சார் என்னைப் பாராட்டினார். அந்த படத்தில் இடம் பெற்றுள்ள பாடலான பேர் வெச்சாலும் பாடலில் பாட்டியின் காலில் விழும் கமல் சார் அடுத்து எனது காலில் சொல்லாமல் விழுந்துவிட்டார். அதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. நான் குதித்துவிட்டேன். இப்போதும் அந்த பாடலில் இந்த காட்சி உள்ளது.
கிளாமர்: என்னை மலையாள சினிமாவுக்கு போகச் சொல்லி அறிவுரை வழங்கியதே கமல் சார் தான். அவர் என்னிடம் சொன்னது, நீங்க க்ளோஸா நடிக்க மாட்டேன்னு சொல்றீங்க. கிளாமராகவும் நடிக்க மாட்டேன் என்கிறீர்கள். உங்களுக்கு தமிழைக் காட்டிலும் மலையாளப் படங்கள் சரியாக இருக்கும். அங்கு நீங்கள் நல்ல நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்ய முடியும் என்று எனக்கு அறிவுரை கூறியது கமல் சார் தான்.
நடிகைகள்: சினிமாவில் நீண்ட காலம் நிலைத்து நிற்க முடியாமல் பல நடிகைகள் வெளியேறுவது ஏன் என்ற கேள்விக்கு, இன்றைக்கு யாரெல்லாம் கிளாமராக நடிக்கிறார்களோ அவர்களுக்குத்தான் அதிக சம்பளம், அவர்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் என திரையுலகம் மாறிவிட்டது. இப்படி இருக்கும்போது, இளம் வயதிலேயே நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் ஒரு நடிகை தொடர்ந்து நடிப்பது என்பது சவாலான விஷயம் தான்" எனவும் அவர் கூறினார். இவரது இந்த பேட்டி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











