நடிகை ஊர்வசி மறுமணம்... கேரள கட்டிட தொழில் அதிபரை காதலித்து மணந்தார்
சென்னை: கட்டிட தொழில் அதிபர் சிவன் என்பவரை நடிகை ஊர்வசி மறுமணம் செய்து கொண்டுள்ளார்.
இயக்குனர் பாக்யராஜின் முந்தானை முடிச்சு படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஊர்வசி. காமெடி மற்றும் குணச்சித்திர நடிப்புக்கு பெயர் பெற்ற நடிகை ஊர்வசி இதுவரை மலையாளம், தமிழ் என 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார்.
சினிமாவில் ஜெயித்த ஊர்வசியின் முதல் திருமணம் தோல்வியில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து சில காலம் தனிமையில் வாழ்ந்த ஊர்வசி தற்போது காதலித்து மறுமணம் செய்து கொண்டுள்ளதாக மலையாளப் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

திருமணம்...
கடந்த 2000ம் ஆண்டு ஊர்வசிக்கும் மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனுக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தேஜா லட்சுமி என்ற மகள் இருக்கிறார்.

விவாகரத்து....
கடந்த 2008ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக ஊர்வசி-மனோஜ் கே விஜயன் தம்பதி விவாகரத்து பெற்று கொண்டனர். ஆனால், அவர்களது மகள் தேஜா லட்சுமி மனோஜ் கே.ஜெயனிடம் வளர்ந்து வருகிறார்.

மறுமணம்....
விவாகரத்தைத் தொடர்ந்து மனோஜ் கே.ஜெயன், ஆஷா என்ற பெண்ணை மறுமணம் செய்து கொண்டார்.

காதல் திருமணம்...
இந்நிலையில், தற்போது ஊர்வசியும் கட்டுமான தொழில் அதிபர் சிவபிரசாத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிவபிரசாத் ஊர்வசியின் சகோதரரின் நண்பர் எனக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











