ஆசியாவிலேயே இவங்களுக்கு தான் அந்த மரியாதையாம்.. யங் சூப்பர்ஸ்டார் பட்டம் வேற.. கலக்கும் ஊர்வசி!
சென்னை: லெஜண்ட் சரவணன் அருள் படத்தில் நாயகியாக நடித்து வரும் ஊர்வசி ரவுத்தேலாவின் கவர் போட்டோ வைரலாகி வருகிறது.
இந்தியா மற்றும் ஆசிய பிரபலங்களிலேயே முதன் முறையாக ஈராக் நாட்டின் நம்பர் ஒன் இதழின் அட்டைப் படத்தை அலங்கரிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
பாலிவுட்டையே தற்போது ஆட்சி செய்வதும் இவர் தான் என அந்த மேகஸின் புகழ்ந்து தள்ளி இருக்கிறது.

யாக் சவாரி
லெஜண்ட் சரவணா படத்தில் நாயகியாக நடித்து வரும் நடிகை ஊர்வசி ரவுத்தேலா சமீபத்தில் 35 மில்லியன் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களை பெற்றதை கொண்டாடும் வகையில் யாக் மீது ஏறி சவாரி செய்த புகைப்படத்தை பதிவிட்டு தனது ரசிகர்களை சந்தோஷப்படுத்தினார்.
முட்டை விட்டு
குறும்புத் தனமும் குழந்தை மனசும் கொண்ட இவர், சமீபத்தில் இன்ஸ்பெக்டர் அவினாஷ் வெப்சீரிஸ் படப்பிடிப்பின் இரண்டாவட்து ஷெட்யூலை முடித்த கையோடு குழந்தைகளை போல முட்டை விட்டு விளையாடிய வீடியோவையும் வெளியிட்டு வைரலாக்கினார்.
மிஸ் யூனிவர்ஸ் வீடியோ
இந்தியா சார்பாக இரு முறை மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றதற்காகத் தான் மிகவும் பெருமைப் படுவதாக, அதன் 5ம் ஆண்டு நினைவுகளை தனது இன்ஸ்டாகிராமை சமீபத்தில் பதிவிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். பிகினி உடையில் ரேம்ப் வாக் செய்யும் ஊர்வசி ரவுத்தேலாவின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.

ஆசியாவிலேயே இவங்கதான்
இந்நிலையில், தற்போது ஈராக் நாட்டின் நம்பர் ஒன் மேகஸின் ஆன பாக்தாத் ஸ்டைல் ஸ்ட்ரீட் இதழின் அட்டைப் படத்தை அலங்கரித்துள்ளார் நடிகை ஊர்வசி ரவுத்தேலா. மேலும், அந்த கவர் போட்டோவை ஷேர் செய்த ஊர்வசி, இந்தியா மற்றும் ஆசிய பிரபலங்களிலேயே இந்த அங்கீகாரம் தனக்குத் தான் முதன்முதலில் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

யங் சூப்பர்ஸ்டார்
பாக்தாத் ஸ்டைல் ஸ்ட்ரீட் எனும் ஃபேஷன் மேகஸின் அட்டைப்படத்தில் குதிரையில் ஏறி சவாரி செய்யும் அரசி போல போஸ் கொடுத்திருக்கும் இவருக்கு அந்த இதழ், பாலிவுட்டின் யங் சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்தையும், பாலிவுட்டையே இவர் தான் தற்போது ஆட்சி செய்கிறார் என்றும் குறிப்பிட்டு உற்சாகப்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











