இந்தியா - பாகிஸ்தான் மேட்ச்சை விட இவங்க மேட்ச் பெருசா இருக்கே.. பறக்கும் ஊர்வசி ரவுத்தேலா மீம்ஸ்!

சென்னை: தி லெஜண்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஊர்வசி ரவுத்தேலா.

Recommended Video

Lakshmi Manju | ரஜினின்னு சொன்னாலே தன்னால ஸ்டைல் வந்துடும் | *INTERVIEW

சமீபத்தில் இவருக்கும் இவரது முன்னாள் காதலர் என சொல்லப்படும் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டுக்கும் இடையே சமூக வலைதளத்தில் காரசார விவாதங்கள் மறைமுகமாக நடைபெற்றன.

இந்நிலையில், நேற்று நடந்த இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை காண நடிகை ஊர்வசி ரவுத்தேலா கிரவுண்டுக்கு வந்ததைத் தொடர்ந்து ஏகப்பட்ட மீம்கள் டிரெண்டாகி வருகின்றன.

கிரிக்கெட்டே பார்க்க மாட்டேன்

கிரிக்கெட்டே பார்க்க மாட்டேன்

பாலிவுட்டின் கவர்ச்சி நடிகையான ஊர்வசி ரவுத்தேலா, ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார் என்கிற கேள்வியை எழுப்ப, நான் கிரிக்கெட்டே பார்த்தது இல்லை. எனக்கு அது பிடிக்கவே பிடிக்காது என சொல்லி இருந்தார். ஆனால், இவருக்கும் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டுக்கும் இப்படியொரு உறவும் சர்ச்சையும் சென்று கொண்டிருப்பதை மறைத்து பொய் சொன்னார் என்றும், தொடர்ந்து மைதானத்துக்கே சென்று இவர் கிரிக்கெட் பார்த்து வருவதையும் சுட்டிக் காட்டி நெட்டிசன்கள் ஊர்வசியை ஊறுகாய் போட்டு வருகின்றனர்.

உக்கார வச்சிட்டாங்க

உக்கார வச்சிட்டாங்க

ஊர்வசி ரவுத்தேலா இந்தியா - பாகிஸ்தான் போட்டியை பார்க்க வருவது கேப்டன் ரோகித் சர்மாவுக்கு முன்னதாக தெரிந்து விட்டதோ என்னவோ தெரியவில்லை. நேற்றைய போட்டியில் தம்பி நீ வேண்டாம்ப்பா, நாங்க தினேஷ் கார்த்திக்கை வைத்தே கீப்பிங் பார்த்துக் கொள்கிறோம் என உட்கார வைத்து விட்டார். ஊர்வசி ரவுத்தேலா ஆசையாய் யார் மேட்ச்சை பார்க்க வந்தாரோ அவரை இப்படி உட்கார வச்சிட்டீங்களே என்றும் நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

ஒருவரை ஒருவர் பார்க்காமல்

ஒருவரை ஒருவர் பார்க்காமல்

இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதை விட ஊர்வசி ரவுத்தேலா கிரவுண்டுக்கு வந்து ரசிர்களின் கவனத்தை திசை திருப்பி விட்டார். ஆஸ்கர் மேடையில் வில் ஸ்மித் அறைந்தது போல நேற்றைய போட்டியும் ஆகிடுச்சு என கமெண்ட் அடித்து வருகின்றனர். மேலும், போட்டி முடியும் வரை இப்படித்தான் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் இருந்தனர் என மோடியும், மம்தாவும் ஒரே ஹெலிகாப்டரில் பயணம் செய்த காட்சியை போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.

லட்டு கொடுத்து கொண்டாட்டம்

லட்டு கொடுத்து கொண்டாட்டம்

நடிகை ஊர்வசி ரவுத்தேலா இந்தியா வெற்றி பெற்றதற்கு லட்டு கொடுத்து கொண்டாடிய வீடியோவை ஷேர் செய்துள்ளார். அதனை பதிவிட்டு, ரிஷப் பண்ட் விளையாடாமல் உட்கார வைத்ததை கிண்டல் செய்தே அவர் இப்படி கொண்டாடி இருக்கிறார் என ஏகப்பட்ட ட்ரோல் மீம்கள் பறந்து வருகின்றன.

ஒரே ரொமான்ஸ் தான்

ஒரே ரொமான்ஸ் தான்

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச்சை பார்க்கிறதா? ஸ்டேடியத்தில் இவங்க ரெண்டு பேரும் எப்படி பார்த்துக் கொள்கின்றனர் என்பதை பார்க்கிறதா? என நெட்டிசன்கள் பங்கம் செய்து வருகின்றனர். அடிக்கடி இப்படித்தான் ஒருவரை ஒருவர் பார்த்துருப்பாங்க என டைரி மில்க் விளம்பர காட்சிகளையும் போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.

 ஐ லவ் யூ ஊர்வசி

ஐ லவ் யூ ஊர்வசி

நேற்றைய போட்டியில் ரிஷப் பண்ட் ஆடியிருந்தார் என்றால், ஐ லவ் யூ ஊர்வசி என இப்படித்தான் செய்திருப்பார் என நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர். சோட்டா பையா பேட், பால் மட்டும் வச்சி விளையாடு என்கிட்ட விளையாடாதேன்னு ஊர்வசி சொன்ன நிலையில், கிரிக்கெட் கூட விளையாட முடியாமல் ரிஷப் பண்ட் கரியர் இப்படி காலி ஆகிடுச்சேன்னும் மீம்கள் பறக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X