கொரோனா நிவாரண நிதி.. பிரபல கவர்ச்சி நடிகை ரூ.5 கோடி உதவி.. எல்லோரும் உதவி செய்ய கோரிக்கை!
மும்பை: கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.5 கோடியை வழங்கி இருக்கிறார், அந்த பிரபல நடிகை.
கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன.
சீனாவில் உருவான இந்த உயிர்கொள்ளி வைரஸ், மற்ற நாடுகளுக்கும் பரவிவிட்டது. இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ்
அமெரிக்காவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். மற்ற நாடுகளைப் போல இந்தியாவிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 67,152 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்கள் எண்ணிக்கை 2,206 ஆக அதிகரித்திருக்கிறது.

நிவாரண நிதி
மற்ற நாடுகளை விட இந்தியாவில் பாதிப்பு குறைவு என்றாலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது, மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கொரோனாவை எதிர்த்து போராடவும் உதவு செய்யவும் பலர் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள் உதவிகளை வழங்கி வரும் நிலையில், பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்தெலாவும் நிவாரண நிதி வழங்கியுள்ளார்.

நடன வகைகள்
அவர் ஐந்து கோடி ரூபாய், வழங்கியுள்ளார். ஆன்லைனில், உடல் எடையை குறைப்பதற்கான நடன வகுப்புகளை இலவசமாக நடத்தினார் ஊர்வசி. அதில் ஸும்பா, டபாடா, லதின் நடன வகைகளை சொல்லிக் கொடுத்தாராம். இதை, டிக்டாக், 18 மில்லியன் மக்களிடம் இணைத்ததன் மூலம் ரூ.5 கோடி கிடைத்தது. அந்தத் தொகையை அவர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

உதவ வேண்டும்
‘நிவாரணம் வழங்கிய நடிகர்கள், அரசியல்வாதிகள், இசை அமைப்பாளர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு நன்றியுள்ளவளாக இருக்கிறேன். ஏனென்றால் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அனைவருக்கும் ஆதரவு தேவை. எந்த நன்கொடையும் குறைவானதல்ல. கொரோனாவை முறியடிக்க நாம் உதவவேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

அமலா பால் கேரக்டர்
நடிகை ஊர்வசி ரவ்தெலா, 'சிங் சாப் த கிரேட்' என்ற இந்திப் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர். இதில் சன்னி தியேல், பிரகாஷ் ராஜ் உட்பட பலர் நடித்திருந்தனர். இதையடுத்து, ஷனம் ரே, கிரேட் கிராண்ட் மஸ்தி, காபில் ஹேட்ஸ்டோரி 4, பகல்பந்தி உட்பட சில படங்களில் நடித்துள்ளார். 'திருட்டுப்பயலே 2 படத்தின் ரீமேக்கில் அமலா பால் நடித்த கேரக்டரில் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











