பிறந்தநாள் அதுவுமா கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்-ஐ வெறுப்பேற்றிய லெஜண்ட் ஹீரோயின்.. இப்படியா?

சென்னை: கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் பிறந்தநாளை முன்னிட்டு ஊர்வசி ரவுத்தேலா பண்ண வேலை ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தி உள்ளது.

ரசிகர்களை விட கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் இன்று பிறந்தநாளை நிம்மதியாக கொண்டாடியது போலத்தான் என நினைத்து டென்ஷன் ஆகியிருப்பார் என ட்ரோல்களும் குவிந்து வருகின்றன.

அப்படி தி லெஜண்ட் நாயகி ஊர்வசி ரவுத்தேலா என்னதான் பண்ணினார் என்பதை இங்கே விரிவாக பார்ப்போம்..

எக்ஸ் லவ்வர்

எக்ஸ் லவ்வர்

கிரிக்கெட் வீரர்கள் நடிகைகளுடன் டேட்டிங் செல்வதும், அவர்களுடன் ரகசிய வாழ்க்கையை நடத்துவதும் பின்னர் விட்டு விடுவதும் தொடர்கதையாகி வருவதை போல ரிஷப் பண்ட்டும் அப்படியொரு காதல் வலையில் சிக்கி மீண்டுள்ளார். பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலாவும் ரிஷப் பண்ட்டும் உயிருக்கு உயிராக காதலித்து பின்னர் பிரேக்கப் செய்து கொண்டனர் என பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேச்சுக்கள் அடிபட்டு வந்தன.

ஓப்பன் ஃபைட்

ஓப்பன் ஃபைட்

பிரிந்து விட்ட இருவரும் திடீரென சோஷியல் மீடியாவில் பெயர்களை மட்டும் குறிப்பிடாமல் மறைமுகமாக சண்டை போடுவது போல ஓப்பன் ஃபைட் போட்டு வருகின்றனர். அவர்களது போஸ்ட் வந்த உடனே நெட்டிசன்கள் ரிஷப் பண்டையும் ஊர்வசி ரவுத்தேலாவையும் ட்ரோல் செய்ய ஆரம்பித்து விடுகின்றனர்.

பொய்க்காரி

பொய்க்காரி

லெஜண்ட் சரவணனின் தி லெஜண்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஊர்வசி ரவுத்தேலா அந்த படத்தின் வெளியீட்டின் சமயத்தில் கொடுத்த பேட்டியில், தன்னை பார்க்க ஒரு கிரிக்கெட் வீரர் பல மணி நேரங்கள் வந்து ஹோட்டல் லாபியில் வெயிட் பண்ணினார் என பேசியிருந்தார். அந்த பேட்டியை உடனடியாக பார்த்த ரிஷப் பண்ட் சில பேர் பிரபலம் அடைவதற்காக வாய்க்கு வந்த பொய்யெல்லாம் பேசுவாங்க என சொன்னது தான் பிரச்சனை வெடிக்க காரணம் என்கின்றனர்.

பேட் பால் மட்டும் ஆடு

பேட் பால் மட்டும் ஆடு

பதிலடி கொடுக்கும் விதமாக ஊர்வசி ரவுத்தேலா சோட்டு பையா கம்முனு பேட் பால் மட்டும் ஆடு, என்கிட்ட உன் வால ஆட்டாதேன்னு பேச சோஷியல் மீடியாவே கொழுந்து விட்டு எரிந்தது. இருவரது பெயர்களின் ஹாஷ்டேக்குகளும் டிரெண்டாகி ட்ரோல்கள் பறக்கத் தொடங்கியதும் ரிஷப் பண்ட் தனது போஸ்ட்டை டெலிட் செய்து விட்டார்.

ரிஷப் பண்ட் பிறந்தநாள்

ரிஷப் பண்ட் பிறந்தநாள்

1997ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி பிறந்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் இன்று தனது 25வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில், அவரது முன்னாள் காதலி எனக் கூறப்படும் 28 வயது ஊர்வசி ரவுத்தேலா பதிவிட்டுள்ள வீடியோ போஸ்ட் ரிஷப் பண்ட் ரசிகர்களை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது.

ஃபிளையிங் கிஸ்

ஃபிளையிங் கிஸ்

ஹேப்பி பர்த்டே என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெயர் ஏதும் குறிப்பிடாமல் ஊர்வசி ரவுத்தேலா வீடியோ போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார். மேலும், அந்த வீடியோவில் ஃபிளையிங் கிஸ் கொடுத்துள்ள நிலையில், ஊர்வசி ரவுத்தேலா ரசிகர்களுக்கும் ரிஷப் பண்ட் ரசிகர்களுக்கும் இடையே மீண்டும் ட்விட்டரில் சண்டை வெடித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X