காந்தாரா 2 படத்தில் ஹீரோயின் யாரு தெரியுமா? ரிஷப் ஷெட்டிக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை!

பெங்களூரு: கன்னட திரையுலகில் கடந்த ஆண்டு வெளியான காந்தாரா திரைப்படம் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது. வெறும் 16 கோடிக்கு உருவான காந்தாரா திரைப்படம் 400 கோடி வசூலை ஈட்டி மிரட்டியது.

பஞ்சுருளி தெய்வத்தை மையமாக கொண்டு பூதகோல நடனமாடும் காட்டில் வாழும் வன மக்களின் கதையாக இந்த படம் உருவாகி இருந்தது.

கன்னட இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த இந்த திரைப்படம் ஆஸ்கர் போட்டி வரை சென்றது குறிப்பிடத்தக்கது.

அமித்ஷா பாராட்டு

அமித்ஷா பாராட்டு

காந்தாரா படத்தை சமீபத்தில் தான் பார்த்தேன். தக்‌ஷின கன்னடாவின் வளம்மிக்க கலாசாரத்தை இயக்குநர் ரிஷப் ஷெட்டி காந்தாரா படம் மூலம் அழகாக காட்டி உள்ளார். எந்தவொரு சூழ்நிலையிலும் விவசாயத்தை விடாமல் செய்து வரும் நிலப்பகுதிகளில் அந்த இடமும் முக்கியமானது என பாராட்டி உள்ளார் அமித்ஷா.

400 கோடி வசூல்

400 கோடி வசூல்

16 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படியொரு தரமான படத்தைக் கொடுக்க முடியும் என இயக்குநர் ரிஷப் ஷெட்டி காட்டியதை பார்த்து ஒட்டுமொத்த உலக சினிமாவே மிரண்டு போயுள்ளது. பூதகோல நடனமாடும் காட்சிகள் தொடங்கி கிளைமேக்ஸில் ரிஷப் ஷெட்டி சாமி வந்து எதிரிகளை பந்தாடும் காட்சிகள் என அனைத்துமே ரசிகர்களை வெகுவாக கவர 400 கோடி ரூபாய் வசூலை ஈட்டி உள்ளது.

காந்தாரா 2

காந்தாரா 2

காந்தாரா படத்தின் முதல் பாகம் ஹிட் அடித்த நிலையில், அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் ரிஷப் ஷெட்டி மும்முரம் காட்டி வருகிறார். காந்தாரா படம் தான் இரண்டாம் பாகம் என்றும் அதன் முதல் பாகத்தை தான் உருவாக்கப் போகிறேன் எனக் கூறி உள்ளார். சிவாவின் அப்பா கதாபாத்திரத்தின் கதையை ப்ரீக்வெலாக இயக்கப் போகிறாரா ரிஷப் ஷெட்டி என ரசிகர்கள் எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளனர்.

சப்தமி கவுடா

சப்தமி கவுடா

ரிஷப் ஷெட்டிக்கு ஜோடியாக காந்தாரா படத்தில் கன்னட நடிகை சப்தமி கவுடா போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். சொந்த ஊர் மக்களையே ஊரை விட்டு காலி பண்ண விருப்பமே இல்லாமல் வேலை பார்க்கும் காட்சிகளிலும் ஹீரோவுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளிலும் அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

பாலிவுட் வாய்ப்பு

பாலிவுட் வாய்ப்பு

கன்னட நடிகையான சப்தமி கவுடா காந்தாரா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை இயக்கிய பாலிவுட் இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் உருவாகி வரும் தி வேக்ஸின் வார் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், காந்தாரா 2 படத்தில் பாலிவுட் நடிகை ஒருவரை ரிஷப் ஷெட்டி இறக்க உள்ளார்.

காந்தாரா 2 ஹீரோயின்

காந்தாரா 2 ஹீரோயின்


ரிஷப் ஷெட்டி உடன் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு காந்தாரா 2 லோடிங் என கேப்ஷன் கொடுத்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளார். காந்தாரா 2 படத்தில் ஊர்வசி ரவுத்தேலா தான் ஹீரோயினா என ரசிகர்கள் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

தி லெஜண்ட் படத்தில்

தி லெஜண்ட் படத்தில்

பாலிவுட் கவர்ச்சி நடிகையான ஊர்வசி ரவுத்தேலா லெஜண்ட் சரவணன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான தி லெஜண்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அந்த படம் அவருக்கு கோலிவுட்டில் வரவேற்பை கொடுக்கவில்லை. தெலுங்கு படத்தில் நடித்து வரும் ஊர்வசி ரவுத்தேலா தற்போது கன்னட படத்திலும் கமிட் ஆகி உள்ளார்.

ரிஷப் பன்ட் இல்லை

ரிஷப் பன்ட் இல்லை

ஊர்வசி ரவுத்தேலா ரிஷப் ஷெட்டி உடன் போட்டோ எடுத்துள்ள நிலையில், ரிஷப் ஷெட்டியா? நாங்க ரிஷப் பன்ட்டுன்னு நினைச்சிட்டோம் என நெட்டிசன்கள் கமெண்ட் பக்கத்தில் கலாய்த்து வருகின்றனர். இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பன்ட் சமீபத்தில் கார் விபத்தில் அடிபட்ட நிலையில், அவரது முன்னாள் காதலியான ஊர்வசி ரவுத்தேலா அவரை சந்தித்தாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X