டோலிவுட்டுக்கு படையெடுத்த பிரபல பாலிவுட் ஹீரோயின்.. ’பிளாக் ரோஸ்’ தலைப்பே தாறுமாறா இருக்கே!

ஹைதராபாத்: பிரபல பாலிவுட் ஹீரோயின் ஊர்வசி ரவுத்தேலா, 'பிளாக் ரோஸ்' எனும் தெலுங்கு படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகம் ஆகவுள்ளார்.

Recommended Video

விருது விழாவுக்கு தேவதை போன்று வந்த ஐஸ்வர்யா ராய் வீடியோ

இயக்குநர் அனில் ஷர்மா இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான சிங் சாப் தி கிரேட் எனும் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

லாக்டவுன் சமயத்தில் ஏகப்பட்ட கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் களமிறக்கி ரசிகர்களை கிறங்கடித்து வந்தார்.

பால் குளியல்

பால் குளியல்

பிகினியுடனும், அரை நிர்வாணமாகவும் தாராளமாக கவர்ச்சி காட்டி இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் அடிமை என்றே சொல்லலாம். கடந்த ஜூன் மாதம் இவர் வெளியிட்ட பால் குளியல் புகைப்படம் இணையத்தையே அனல் மூட்டி 1 மில்லியன் லைக்குகளை அள்ளி வேற லெவலில் வைரலானது.

ஹாட் ஹீரோயின்

ஹாட் ஹீரோயின்

சனம் ரே, கிரேட் கிராண்ட் மஸ்தி, காபில், ஹேட் ஸ்டோரி 4, பாகல் பன்ட்டி மற்றும் சமீபத்தில் OTT-ல் வெளியான விர்ஜின் பானுப்பிரியா என ஏகப்பட்ட பாலிவுட் படங்களில் நடித்துள்ள இவர், தனது உச்சகட்ட கவர்ச்சியை காட்டி, பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் ஹாட் ஹீரோயினாக வலம் வருகிறார்.

தெலுங்கில்

தெலுங்கில்

இந்நிலையில், தற்போது, தெலுங்கு மொழியில் ‘பிளாக் ரோஸ்' எனும் படத்தில் தான் நடிக்கப் போவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஊர்வசி ரவுத்தேலா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதற்காக, மும்பையில் இருந்து ஹைதராபாத்துக்கு சமீபத்தில் விமானத்தில் பறந்து வந்துள்ளார் இந்த கவர்ச்சி தேவதை.

பிளாக் ரோஸ்

பிளாக் ரோஸ்

ராம் சரணின் ரச்சா, ரவி தேஜாவின் பெங்காலி டைகர், பேப்பர் பாய் உள்ளிட்ட பிளாக்பஸ்டர் படங்களை இயக்கிய பிரபல தெலுங்கு இயக்குநர் சம்பந்த் நந்தி தான் இந்த படத்தை இயக்கவுள்ளார். நடிகை ஊர்வசி ரவுத்தேலாவை மனதில் வைத்து உருவான கதையை ஒரே மூச்சில் படித்து முடித்த ஊர்வசி, தனக்கு கதை மிகவும் பிடித்து விட்டதாகவும், இந்தி, தெலுங்கு என இரு மொழிகளில் இந்த படம் வெளியாகவுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய மொழிகளில்

தென்னிந்திய மொழிகளில்

தெலுங்கில் ‘பிளாக் ரோஸ்' எனும் படத்தில் அறிமுகமாகவுள்ள இவர், முன்னதாகவே தென்னிந்திய மொழியான கன்னடத்தில் ஒரு படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் ஏ.பி. அர்ஜுன் இயக்கத்தில் தர்ஷன், பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான மிஸ்டர் ஐராவதா படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X