புலிக்குட்டியை பூனைக்குட்டிப் போல் தடவிப் பார்த்த பிரபல நடிகை.. செம தில்லு தான் போங்க!

சென்னை: பிரபல நடிகை ஊர்வசி ரவுத்தேலா புலிக்குட்டியை பூனைக் குட்டியை தடவுவதை போல தடவிப் பார்க்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

ஹேட் ஸ்டோரி 4 படத்தின் மூலம் பாலிவுட்டில் பிரபலமானவர் ஊர்வசி ரவுத்தேலா.

லெஜண்ட் சரவணன் அருளின் பிரம்மாண்ட படத்தின் மூலம் விரைவில் தமிழில் அறிமுகமாக உள்ளார்.

கட்டுக்கடங்காத கவர்ச்சி

கட்டுக்கடங்காத கவர்ச்சி

சனம் ரே படத்தில் ஆடைகளை துறந்து அரை நிர்வாணமாக குளிப்பது போல மொத்த முதுகையும் காட்டி அசத்திய ஊர்வசி ரவுத்தேலா. ஹேட் ஸ்டோரி 4 திரைப்படம் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமானார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி போட்டோக்கள் மற்றும் டாப்லெஸ் போட்டோக்கள் என கட்டுக்கடங்காத கவர்ச்சியை காட்டி வருகிறார்.

37 மில்லியன் ஃபாலோ பண்றாங்க

37 மில்லியன் ஃபாலோ பண்றாங்க

கடந்த மார்ச் மாதம் தான் 35 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் கடந்தார். இந்நிலையில், தற்போது 37 மில்லியன் ரசிகர்களை கடந்து அசால்ட்டு காட்டி வருகிறார் ஊர்வசி ரவுத்தேலா. சமீபத்தில் வெளியான இவரது ஆல்பம் பாடல் வீடியோக்கள் எல்லாம் நூறு மில்லியன் வியூக்களை நெருங்கி சாதனை படைத்து வருகின்றன.

லெஜண்ட் படத்தில்

லெஜண்ட் படத்தில்

கன்னடம், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்துள்ள இவர், முதல் முறையாக தமிழில் லெஜண்ட் சரவணன் அருள் நடித்து வரும் படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார். சுமார் 200 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் அந்த பிரம்மாண்ட படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மணாலியில் படமாக்கப்பட்டது.

வெர்சேஸ் பேபி

வெர்சேஸ் பேபி

சமீபத்தில் குரு ரந்தாவா உடன் இணைந்து இவர் நடித்த தூப் காயே வீடியோ பாடல் 100 மில்லியனை கடந்து ஹிட் அடித்தது. இந்நிலையில், அடுத்ததாக வெர்சேஸ் பேபி எனும் வீடியோ பாடலில் நடித்துள்ளார். அதன் புரமோஷன்களை தீவிரமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்து வருகிறார் ஊர்வசி ரவுத்தேலா.

கையில் பாம்புடன்

கையில் பாம்புடன்

நீச்சல் குளத்தில் அந்த பாடலுக்காக நடனமாடிய போது மலைப் பாம்பை ஒன்றை கையில் பிடித்தபடி நடித்துள்ளார் நடிகை ஊர்வசி ரவுத்தேலா. அதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு பயமே இல்லையா என கமெண்ட் செய்து பாராட்டி இருந்தனர். இந்நிலையில், அடுத்த ஒரு வைரல் வீடியோவையும் ஊர்வசி ரவுத்தேலா வெளியிட்டுள்ளார்.

புலிக்குட்டி

வெர்சேஸ் பேபியின் பாடல் ஷூட்டிங்கிற்காக வெளிநாடு சென்றிருந்த நிலையில், அங்கே ஷோபாவில் இருந்த வெள்ளை நிற புலிக்குட்டியை பூனைக் குட்டியை தொட்டுப் பார்த்து தடவிக் கொடுப்பதை போல ஊர்வசி ரவுத்தேலா தடவிக் கொடுத்த வீடியோவை வெளியிட்டு தற்போது வைரலாக்கி உள்ளார்.

புயல் நிவாரணம்

புயல் நிவாரணம்

சமீபத்தில் மும்பையை தாக்கிய டவ் தே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பலரது பாராட்டுக்களையும் அள்ளி உள்ளார் ஊர்வசி ரவுத்தேலா. உணவின்றி வாடும் வாயில்லா ஜீவன்களுக்கும், சிறுவர், சிறுமிகளுக்கும் உணவளித்து மகிழ்ந்த போட்டோக்களும் வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X