கையில் சரக்குடன்.. வெறித்தனமாக போஸ் கொடுத்து நிற்கும் லெஜண்ட் சரவணா ஹீரோயின்.. எதுக்கு தெரியுமா?

சென்னை: பாலிவுட்டின் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவுத்தேலா கையில் சரக்கு கோப்பையுடன் வெறித்தனமாக போஸ் கொடுத்து அதிரவைத்துள்ளார்.

இந்தி, தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ள இவர், தற்போது தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.

லெஜண்ட் சரவணன் அருள் நடித்து வரும் படத்தில் நாயகியாக நடித்து வரும் ஊர்வசி ரவுத்தேலா தொடர்ந்து சமூக வலைதளங்களில் கவர்ச்சியான போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு மில்லியன் கணக்கில் லைக்குகளை அள்ளி வருகிறார்.

இவர் தான் காதலரா

இவர் தான் காதலரா

பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா தற்போது குரு ரந்தாவா என்பவருடன் தான் டேட்டிங் செய்து வருகிறார் என பாலிவுட் வட்டாரங்களில் பரவலாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மேலும், அதனை நிரூபிக்கும் விதமாக சமீபத்தில் தனது ஆண் நண்பருடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு, லவ் ஹாஷ்டேக்கையும் போட்டுள்ளார் ஊர்வசி.

எல்லாமே வில்லங்கம்

எல்லாமே வில்லங்கம்

இவருக்கு இன்ஸ்டாகிராமில் 35 மில்லியன் ரசிகர்களுக்கும் மேல் ஃபாலோயர்கள் உள்ளனர். இரண்டு முறை மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் கலந்து கொண்ட இவர், வெறும் உள்ளாடையுடனும், வில்லங்கமாகவும் ஏகப்பட்ட போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு இணையத்தை அதிரவைத்து வருகிறார்.

லெஜண்ட் சரவணன் அருள்

லெஜண்ட் சரவணன் அருள்

கன்னடம், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்துள்ள இவர், முதல் முறையாக தமிழில் லெஜண்ட் சரவணன் அருள் நடித்து வரும் படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார். சுமார் 200 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் அந்த பிரம்மாண்ட படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மணாலியில் படமாக்கப்பட்டது.

அந்த காரணத்திற்காக

அந்த காரணத்திற்காக

இயக்குநர்கள் ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் உருவாகி வரும் லெஜண்ட் சரவணா படத்தில் தான் ஒரு ஐஐடி மாணவியாக நடித்து வருவதாகவும், அந்த ஒரே காரணத்திற்காக மட்டும் தான் அந்த படத்தில் நடிக்க சம்மதித்தேன் என்றும், ஐஐடியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்கிற தனது சிறு வயது கனவு இந்த படத்தின் மூலமாவது நிறைவேறுவது மகிழ்ச்சி எனக் குறிப்பிட்டுள்ளார்.

கையில் சரக்குடன்

கையில் சரக்குடன்

யாக் மீது ஏறி சவாரி செய்யும் புகைப்படம், கவர் போட்டோவிற்காக குதிரை சவாரி என கலக்கி வரும் ஊர்வசி ரவுத்தேலா, திடீரென கையில் சரக்குடன் வெறித்தனமாக போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராம் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார். நேற்று இரவு பாலிவுட்டில் நடைபெற்ற பிலிம் ஃபேர் விருது விழாவில் வெற்றி பெற்றவர்களை சியர்ஸ் பண்ண தான் இப்படியொரு போஸாம்.

ஆளுயர ரெட் ஒயின்

ஆளுயர ரெட் ஒயின்

அப்படியே மதுக்கோப்பையில் இருந்து ரெட் ஒயின் வெளியே வந்து அழகிய பெண்ணாக மாறி நிற்கிறது என சிகப்பு நிற உடையில் கவர்ச்சி பொங்க நிற்கும் ஊர்வசி ரவுத்தேலாவை ரசிகர்கள் பயங்கரமாக வர்ணித்து ஜொள்ளு விட்டு வருகின்றனர். வெறும் 13 மணி நேரத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் இந்த போட்டோவை லைக் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X