அதிர்ச்சி கொடுத்தது விவேக்கின் மறைவு...ஊர்வசி ரவுத்தேலா நெகிழ்ச்சி பதிவு

சென்னை : நடிகர் விவேக், திடீர் மாரடைப்பு காரணமாக ஏப்ரல் 17 ம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவு திரை துறையினரையும், ரசிகர்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

தொடர்ந்து பிரபலங்கள் பலரும் விவேக் உடனான நினைவுகளையும், விவேக் உடன் தாங்கள் பணியாற்றிய அனுபவத்தையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். விவேக் நினைவாக பலர் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.

விவேக் கடைசியாக நடித்த 3 படங்கள்

விவேக் கடைசியாக, விஜய் சேதுபதியுடன் யாதும் ஊரோ யாவரும் கேளீர், கமலுடன் இந்தியன் 2, லெஜண்ட் சரவணன் நடிக்கும் பெயரிடப்படாத படம் என 3 படங்களில் நடித்து வந்தார். இதில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தின் மூலம் தமிழுக்கு ஹீரோயினாக அறிமுகமாக உள்ளவர் ஊர்வசி ரவுத்தேலா.

விவேக்கிற்கு ஊர்வசி இரங்கல்

இவர், விவேக் உடன் பணியாற்றிய அனுபவத்தையும், அவரின் மறைவிற்கு இரங்கலையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விவேக்குடன் தான் எடுத்துக் கொண்ட ஃபோட்டோவையும், விவேக் தனக்கு டயலாக் கற்றுக் கொடுத்த 2 வீடியோக்களையும் ஊர்வசி பதிவிட்டுள்ளார்.

 ஐ மிஸ் யூ விவேக் சார்

ஐ மிஸ் யூ விவேக் சார்

அத்துடன், பத்மஸ்ரீ விவேக் சார், நான் உங்களை எப்போதும் மிஸ் செய்வேன். என் முதல் தமிழ் படத்தில் உங்களைப் போன்ற ஒரு லெஜண்ட் உடன் பணியாற்றிய அனுபவத்தை என்னால் மறக்க முடியாது. உங்களின் இழப்பு என்னை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மரங்களின் காதலன்

மரங்களின் காதலன்

நீங்கள் என் மீதும், உலகின் மீதும் அக்கறை எடுத்துக் கொண்டீர்கள். உங்களின் நகைச்சுவை, வசனங்கள், நீங்கள் மரங்களின் மீது கொண்ட காதல் எதையும் மறக்க முடியாது. விவேக் சாரின் குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். உங்களுடனான சிறப்பான அனுபவங்களை நான் பெற்றுள்ளேன். அனைத்திற்கும் நன்றி சார் என்ற கேப்ஷனும் பதிவிட்டுள்ளார்.

வைரலாகும் ஊர்வசியின் பதிவு

வைரலாகும் ஊர்வசியின் பதிவு

ஊர்வசியின் இந்த பதிவு வைரலாகி வருகிறது. இந்த பதிவை இதுவரை ஆறரை லட்சத்திற்கும் அதிகமானவர்கள் லைக் செய்துள்ளனர். பட சூட்டிற்காக மணாலி சென்ற போது, கடந்த மாதம் தான் விவேக்குடன் ஊர்வசி இந்த ஃபோட்டோவை எடுத்துக் கொண்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X