லெஜண்ட் சரவணா படத்தில் நடிக்க ஏன் சம்மதித்தேன் தெரியுமா? அதிரடி போஸ்ட் போட்ட ஊர்வசி ரவுத்தேலா!

சென்னை: கீத்திகா திவாரிக்கு பதிலாக லெஜண்ட் சரவணா படத்தில் தற்போது நடித்து வருகிறார் பிரபல பாலிவுட் ஹீரோயின் ஊர்வசி ரவுத்தேலா.

Recommended Video

Legend Saravana Manaliல் Duet | Oorvasi, Saravana Arul | Man behind the TEDDY | Cinema Roundup

ஹேட் ஸ்டோரி 4, விர்ஜின் பானுப்பிரியா, சனம் ரே உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் தமிழ் படத்தில் ஏன் கமீட் ஆனேன் என்கிற விளக்கத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழி என பான் இந்திய படமாக இந்த படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

லெஜண்ட் சரவணா

லெஜண்ட் சரவணா

துணிக்கடை, நகைக் கடை என லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் மூலம் தனி சாம்ராஜ்யத்தையே நடத்தி வரும் சரவணன் அருள், தனது விளம்பரப் படங்களில் சில ஆண்டுகளுக்கு முன்பாக நடிக்கத் தொடங்கினார். ஹன்சிகா, தமன்னா உள்ளிட்ட பிரபல நடிகைகளுடன் ஜோடி போட்டு நடனமாடி கலக்கினார்.

சம்மதிக்காத நயன்தாரா

சம்மதிக்காத நயன்தாரா

தல அஜித் மற்றும் விக்ரமை வைத்து உல்லாசம் மற்றும் ஷெரினின் விசில் படங்களை இயக்கிய ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக திட்டமிட்டார் சரவணன் அருள். சுமார் 10 கோடி ரூபாய் சம்பளத்திற்கு நடிகை நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், ஆனால், கால்ஷீட் பிரச்சனை காரணமாக நயன்தாரா சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின. ஹன்சிகா, தமன்னா உள்ளிட்ட சில கோலிவுட்டின் முன்னணி நடிகைகளும் சரவணன் அருளுக்கு ஜோடியாக நடிக்க முன் வரவில்லை.

கீத்திகா திவாரி

கீத்திகா திவாரி

கடந்த 2019ம் ஆண்டு சென்னையில் பிரம்மாண்ட பூஜையுடன் தனது சொந்த தயாரிப்பில் படத்தை தொடங்கினார் சரவணன் அருள். பிரபு, விவேக் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் மாடல் அழகி கீத்திகா திவாரி சரவணன் அருளுக்கு ஜோடி என்று பட பூஜை போடப்பட்டது. ஹாரிஷ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ஹீரோயின் மாற்றம்

ஹீரோயின் மாற்றம்

ஆனால், கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு தொடங்காத சூழலில் தற்போது மணாலியில் லெஜண்ட் சரவணா நடிக்கும் பிரம்மாண்ட படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. ஆனால், கீத்திகா திவாரிக்கு பதிலாக தற்போது லெஜண்ட் சரவணாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா நடித்து வருகிறார். ஹீரோயின் மாற்றத்திற்கான காரணத்தை படக்குழு அறிவிக்கவில்லை.

இதற்காகத்தான் சம்மதித்தேன்

இதற்காகத்தான் சம்மதித்தேன்

எந்தவொரு படத்தில் கமீட் ஆனாலும், அது தொடர்பான அறிவிப்புகளை தயங்காமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வரும் ஊர்வசி ரவுத்தேலா, இதுவரை தமிழ் படத்தில் நடிப்பது குறித்து அறிவிக்காதது ஏன்? என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பினர். இந்நிலையில், தான் ஏன் லெஜண்ட் சரவணா படத்தில் நடிக்க சம்மதித்தேன் என்பது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கி உள்ளார் ஊர்வசி.

ஐஐடி மாணவி

ஐஐடி மாணவி

தமிழில் அறிமுகமாகும் படத்தில் ஐஐடி மாணவியாக நடிக்கிறேன். அந்த ஒரு காரணத்திற்காகத் தான் இயக்குநர்கள் ஜேடி ஜெர்ரி கதையை சொன்னதும் ஓகே சொல்லிவிட்டேன். ஐஐடி மாணவியாக நடிக்க வேண்டும் என்பது எனது கனவு என விளக்கம் கொடுத்துள்ளார் ஊர்வசி ரவுத்தேலா. மேலும், இந்த படம் பல மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது என்றும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X