Cannes 2023 : ஐஸ்வர்யா ராயை காப்பி அடித்த லெஜண்ட் பட ஹீரோயின்.. கிண்டலடிக்கும் பேன்ஸ்!
பிரான்ஸ் : 76வது கேன்ஸ் திரைப்பட விழாவில், ஐஸ்வர்யா ராயை காப்பி அடித்து மேக்கப் போட்டு வந்த ஊர்வசி ரவுதேல்லாவை ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
பிரான்ஸில் கேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் கேன்ஸ் திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது.
இத்திருவிழா மே 17ந் தேதி தொடங்கிய இவ்விழா 27 ஆம் தேதி வரை நடைபெற்றும்.

கேன்ஸ் திரைப்பட விழா : இந்த விழாவில் தமிழ், மராத்தி, மலையாளம் மற்றும் இந்தி என உலகில் பல்வேறு மொழிகளில் உள்ள ஆவணப்படம் படங்கள் திரையிடப்படவுள்ளன. மொத்தம் 600க்கும் மேற்பட்ட படங்கள் இதில் திரையிடப்பட உள்ளன. இந்தியாவின் சார்பில் மத்திய செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இணை அமைச்சர் முருகன் தலைமையிலான 11 பேர் கொண்டகுழு கேன்ஸ் திரைப்படவில் பங்கேற்றுள்ளனர்.
பாலிவுட் முன்னணி நடிகைகள் : பாலிவுட் நடிகைகளான கேன்ஸ் விழாவில் நடிகை சாரா அலிகான் கோல்டன் நிற லெஹங்கா அணிந்திருந்தார். அதே போல, முன்னாள் உலக அழகியான மனுஷி சில்லரும் ஃபேஷன் டிசைனர் ஃபோவாரி வடிவமைத்த வெள்ளை நிற கவுனை அணிந்திருந்தார். ஊர்வசி ரவுதெல்லா, பிங்க் கவன் அணிந்திருந்தார். அவர் பர்வீன் பாபியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்துவருவதால், அதை பிரதிபலிக்கும் வகையில் பிங்க் நிறத்திலான ஆடை அணிந்திருந்தார்.
ஊர்வசி ரவுதெல்லா : அழகான ரஃபிள்ட் கவுனை அணிந்திருந்த ஊர்வசி தனது கழுத்தில் முதலை நெக்லசை அணிந்திருந்தார். இது இணையத்தில் டிரெண்டான நிலையில், கேன்ஸ் திரைப்படவிழாவின் இரண்டாம் நாளில், வெள்ளை கவுனை அணிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல நெக்லஸ் அணிந்து கொண்டு,நீல நிறத்தில் லிப்ஸ்டிக் அணிந்து கொண்டு வந்தார்.

கிண்டலடிக்கும் பேன்ஸ் : 69வது கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு ஐஸ்வர்யா ராய் இதேபோல வெள்ளை நிற கவுன் அணிந்து கொண்டு நீல நிற லிப்ஸ்டிக் அணிந்து இருக்கிறார். இந்த போட்டோவை பகிர்ந்து ஐஸ்வர்யாவை பார்த்து ஊர்வசி காப்பி அடித்துவிட்டார் என கிண்டலடித்து வருகின்றனர். ஊர்வசி ரவுதெல்லா கேன்ஸ் திரைப்படவிழாவில் இரண்டாவது முறையாக கலந்து கொண்டுள்ளார்.
திலெஜண்ட் : லெஜண்ட் சரவணன் நடித்த தி லெஜண்ட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி,மலையாளம் என பான் இந்திய திரைப்படமாக வெளியானது இத்திரைப்படம் பெருமளவு வசூலை வாரிக்குவித்தது. இத்திரைப்படத்தின் மூலம் தமிழ் ஆடியன்ஸ் மனதில் பதிந்துவிட்டார் ஊர்வசி ரவுதெல்லா.


Click it and Unblock the Notifications











