கடலில் கட்டிப் புரண்டு ஆடும் லெஜண்ட் சரவணா ஹீரோயின்.. யூடியூபில் டிரெண்டாகும் புதிய வீடியோ பாடல்!

மும்பை: நடிகை ஊர்வசி ரவுத்தேலாவின் புதிய வீடியோ ஆல்பம் பாடல் ரிலீசாகி யூடியூபில் டிரெண்டாகி வருகிறது.

Recommended Video

நடிகை Urvasi -ன் வைர முக கவசம் | Diamond Face-Mask | Urvasi Rautela

லெஜண்ட் சரவணா நடித்து வரும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வரும் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலாவின் புதிய வீடியோ பாடல் ரிலீசாகி வைரலாகி வருகிறது.

டி-சீரிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த வீடியோ பாடலில் பிரபல பாடகர் குரு ரந்த்வாவுடன் இணைந்து நடித்துள்ளார் ஊர்வசி ரவுத்தேலா.

யூடியூபில் டிரெண்டிங்

யூடியூபில் டிரெண்டிங்

நடிகை ஊர்வசி ரவுத்தேலா மற்றும் பிரபல பாடகர் குரு ரந்த்வா இணைந்து நடித்துள்ள தூப் கயே எனும் வீடியோ பாடல் நேற்று வெளியான நிலையில், யூடியூபில் 21 மில்லியன் பார்வைகளை கடந்து டிரெண்டாகி வருகிறது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து அந்த பாடல் குறித்த புரமோஷன் வீடியோக்களை நடிகை ஊர்வசி ரவுத்தேலா பதிவிட்டு வருகிறார்.

கடற்கரையில் கட்டிப் புரண்டு

பிரபல இயக்குநர் ரெமோ டிசோசா இந்த வீடியோ பாடலை இயக்கி உள்ளார். பாடகர் குரு ரந்த்வாவுடன் கடற்கரையில் கட்டிப் புரண்டு படு ரொமான்டிக்காக இந்த வீடியோ பாடலுக்காக ஆடிப் பாடி நடித்துள்ளார் நடிகை ஊர்வசி ரவுத்தேலா, இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து 3 மில்லியன் லைக்குகளையும் ஊர்வசி ரவுத்தேலா குவித்துள்ளார்.

செம புரமோஷன்

செம புரமோஷன்

தூப் கயே பாடல் நேற்று வெளியான நிலையில், கடந்த சில நாட்களாகவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புரமோஷன்களை தெறிக்கவிட்டுள்ளார் நடிகை ஊர்வசி ரவுத்தேலா. குரு ரந்த்வாவுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களையும், பாடல் வீடியோ காட்சிகளின் சிறு சிறு க்ளிப்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

விவேக்கிற்கு அஞ்சலி

விவேக்கிற்கு அஞ்சலி

தமிழில் லெஜண்ட் சரவணன் அருள் நடித்து வரும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நடிகை ஊர்வசி ரவுத்தேலா. அந்த படத்தில் நடிகர் விவேக்குடன் நடித்த அனுபவங்கள் குறித்தும், அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் சமீபத்தில் பதிவிட்டு நடிகர் விவேக்கின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி இருந்தார் ஊர்வசி ரவுத்தேலா. தமிழில் இவர் அறிமுகமாகும் படத்திற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X