என்ன நடந்ததுன்னா? அந்த காப்பிபேஸ்ட் மேட்டரை அட்மின்தான் பண்ணுச்சாம்..பிரபல நடிகையின் டீம் விளக்கம்!
மும்பை: அந்த காப்பி பேஸ்ட் மேட்டருக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை என்று நடிகையின் சோசியல் மீடியா டீம் விளக்கம் அளித்துள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ், உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன.
இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊர்வசி ரவ்தெலா
இதனால், நடிகர், நடிகைகளில் சிலர் வீட்டில் இருந்தபடி, தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை தங்கள் சமூக வலைத்தளப்பக்கங்களில் வீடியோ மூலம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டீவாக இருக்கும் நடிகை ஊர்வசி ரவ்தெலா, கடந்த சில நாட்களுக்கு முன் பதிவிட்டிருந்த பிகினி ஸ்டில் வைரலானது.

பகல்பந்தி
இவர், 'சிங் சாப் த கிரேட்' என்ற இந்திப் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர். இதில் சன்னி தியேல், பிரகாஷ் ராஜ் உட்பட பலர் நடித்திருந்தனர். இதையடுத்து, ஷனம் ரே, கிரேட் கிராண்ட் மஸ்தி, காபில் ஹேட்ஸ்டோரி 4, பகல்பந்தி உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இப்போது சில படங்களில் நடிக்க இருக்கிறார்.
காப்பி பேஸ்ட்
இவர், பிரபல அமெரிக்க எழுத்தாளரின் ட்விட்டை அப்படியே காப்பியடித்து பதிவிட்டதாதாக பரபரப்பு சர்ச்சை கடந்த சில நாட்களுக்கு முன் கிளம்பியது. நியூயார்க்கை சேர்ந்த எழுத்தாளர் ஜேபி பிரம்மெர். இவர் சமீபத்தில் ஆஸ்கர் விருதுபெற்ற கொரிய திரைப்படமான 'பாரசைட்' பற்றி டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதில் சில ஆங்கில இலக்கணப் பிழைகள் இருந்தன.

மோசமான கிராமர்
அதைக் கூட சரி பண்ணாமல், அதை அப்படியே காப்பி செய்து தனது கருத்துபோல் பதிவிட்டார் என்று ஊர்வசி ரவ்தெலா மீது பரபரப்பு புகார் கூறப்பட்டது. இதை டேக் செய்து பதிவிட்டுள்ள எழுத்தாளர் ஜேபி பிரம்மெர், ஏன் அவர் என் இலக்கணப் பிழையை சரி செய்யவில்லை. என் மோசமான கிராமரை? அதுவும் அதிர்வின் ஒரு பகுதியா? என்று கிண்டலாகக் கேட்டிருந்தார். இது பாலிவுட்டில் பரபரப்பானது.

சோசியல் மீடியா
இந்நிலையில், இந்த காப்பி பேஸ்ட் விவகாரத்துக்கும் நடிகை ஊர்வசிக்கும் தொடர்பில்லை என்று அவரது சோசியல் மீடியா டீம் தெரிவித்துள்ளது. இதுபற்றி அவரது செய்தி தொடர்பாளர் கூறும்போது, இதற்கும் ஊர்வசிக்கும் சம்பந்தமில்லை. இதை போஸ்ட் பண்ணியது அவரது சோசியல் மீடியா டீம்தான். சிரமத்துக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications