ஊர்வசி ரவுத்தேலா உடம்பு பூரா நிலா எப்படி விளையாடுது பாருங்க.. வைரலாகும் சூப்பர் சேலஞ்ச் வீடியோ!
சென்னை: நடிகை ஊர்வசி ரவுத்தேலா சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் டேப் டான்ஸ் சேலஞ்சை ஏற்று நடனமாடிய வீடியோவை ஷேர் செய்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.
இந்தி நடிகையான ஊர்வசி ரவுத்தேலா தமிழில் லெஜண்ட் சரவணா படத்தில் நடித்து வருகிறார்.
அதே போல டோலிவுட்டில் பிளாக் ரோஸ் எனும் படத்தில் அறிமுகமாக உள்ள அவரது நடன வீடியோ தற்போது இந்த சவாலுக்காக வெளியிட்டுள்ளார்.

சூப்பர் சேலஞ்ச்
சமூக வலைதளங்களில் அவ்வப்போது ஏகப்பட்ட சூப்பர் சேலஞ்சுகள் வைரலாவது வழக்கமாகி வருகிறது. இந்நிலையில் தற்போது பிரிட்னி ஸ்பியர்ஸின் கிம்மி மோர் பாடலுக்கு பலரும் நடனம் ஆடி வருகின்றனர். இந்நிலையில், தற்போது அந்த சவாலை இந்திய நடிகை ஊர்வசி ரவுத்தேலா ஏற்று நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பிளாக் ரோஸ்
ஹேட் ஸ்டோரி 4ம் பாகம் எனும் இந்தி படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஊர்வசி ரவுத்தேலா, ஏற்கனவே ஐராவதம் எனும் கன்னட படத்தில் நடித்து தென்னிந்தியாவில் கால் பதித்துள்ள நிலையில், தற்போது பிளாக் ரோஸ் எனும் தெலுங்கு படத்தில் விரைவில் அறிமுகமாகவுள்ளார். அந்த படத்தின் பாடலில் இடம்பெற்ற நடன காட்சியைத் தான் தற்போது ஜெனிஃபர் லோபஸின் பாடல் உடன் இணைத்து பதிவிட்டுள்ளார் ஊர்வசி ரவுத்தேலா.
உடல் முழுக்க நிலா
நிலா போன்ற சிஜி எஃபெக்ட் நடிகை ஊர்வசி ரவுத்தேலாவின் நெற்றி முதல் பாதம் வரை உடலின் பல முக்கிய பாகங்களில் பயணம் செய்து செல்லும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் கத்தரி வெயிலுக்கு நல்ல இதமான வீடியோவாக இது இருக்கேன்னு கமெண்ட் செய்து வருகின்றனர்.

8 லட்சம் லைக்ஸ்
வெறும் 4 மணி நேரத்திலேயே சுமார் 8 லட்சத்திற்கும் மேலான லைக்குகளை ஊர்வசி ரவுத்தேலாவின் இந்த வீடியோ பெற்று வைரலாகி வருகிறது. சில மில்லியன்களையும் இந்த வீடியோ தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் முதல் ஏகப்பட்ட பிரபலங்கள் வரை இந்த வீடியோவுக்கு லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.

74 மில்லியன் வியூஸ்
ஒரே வாரத்தில் நடிகை ஊர்வசி ரவுத்தேலாவின் தூப் காயே எனும் வீடியோ ஆல்பம் பாடல் 74 மில்லியன் வியூக்களை தாண்டி இந்தியளவில் மிகப்பெரிய அளவில் டிரெண்டாகி வருகிறது. பாடகர் குரு ரந்தாவா உடன் இணைந்து நடிகை ஊர்வசி ரவுத்தேலா செம ரொமாண்டிக்காக அந்த வீடியோ பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
Recommended Video

விரைவில் தமிழில்
பிளாக் ரோஸ் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் ஒடிடி தளத்தில் ஊர்வசி ரவுத்தேலாவின் அந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கூடிய விரைவிலேயே லெஜண்ட் சரவணன் அருளுடன் ஊர்வசி ரவுத்தேலா தமிழில் அறிமுகமாகவுள்ள படத்தை காணவும் ரசிகர்கள் வெயிட்டிங்.


Click it and Unblock the Notifications











