எருமை மேல் ஏறி அப்படியொரு போஸ்.. லெஜண்ட் சரவணா ஹீரோயின் போட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்.. ஏன் தெரியுமா?

சென்னை: மணாலியில் படப்பிடிப்பில் உள்ள நடிகை ஊர்வசி ரவுத்தேலா யாக் எனும் பனி பிரதேசங்களில் வாழும் எருமையின் மீது ஏறி கொடுத்துள்ள போஸ் வைரலாகி வருகிறது.

பிரபல பாலிவுட் நாயகியான ஊர்வசி ரவுத்தேலா முதன் முறையாக தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.

ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் உருவாகி வரும் லெஜண்ட் சரவணா படத்தில் நாயகியாக நடித்து வரும் அவர் தற்போது வெளியிட்டுள்ள வித்தியாசமான போட்டோக்கள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

மிஸ் யூனிவர்ஸ்

மிஸ் யூனிவர்ஸ்

2015ம் ஆண்டு மிஸ் டிவா யூனிவர்ஸ் போட்டியில் கலந்து கொண்டு அழகிப் பட்டம் வென்றவர் ஊர்வசி ரவுத்தேலா. பாலிவுட் படங்களில் கவர்ச்சிகரமான கதாபாத்திரங்களில் நடித்து ஏகப்பட்ட இளைஞர்களின் பிபியை எகிற வைத்த ஊர்வசி ரவுத்தேலா விரைவிலேயே கோலிவுட் ரசிகர்களை கிறங்கடிக்க காத்திருக்கிறார்.

சூப்பர் செக்ஸியாக

சூப்பர் செக்ஸியாக

சனம் ரே படத்தில் நிர்வாணமாக குளிப்பது போல மொத்த முதுகையும் காட்டி அசத்திய ஊர்வசி ரவுத்தேலா. ஹேட் ஸ்டோரி 4 திரைப்படத்தில் சூப்பர் செக்ஸியான கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி போட்டோக்கள் மற்றும் டாப்லெஸ் போட்டோக்கள் போட்டு இணையத்தின் சூட்டை அதிகரித்தார்.

தமிழில் அறிமுகம்

தமிழில் அறிமுகம்

பாலிவுட் படங்களை தாண்டி தென்னிந்திய மொழிகளான கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ஊர்வசி ரவுத்தேலா லெஜண்ட் சரவணா படம் மூலமாக தமிழில் முதன் முறையாக அறிமுகமாகவுள்ளார். மணாலியில் நடைபெறும் படப்பிடிப்பில் லெஜண்ட் சரவணாவுடன் தற்போது ரொமான்ஸ் பண்ணும் காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

எருமை மீது ஏறி

எருமை மீது ஏறி

இந்நிலையில், அந்நியன் விக்ரம் போல யாக் எனும் பனி பிரதேசங்களில் வசிக்கும் எருமை மீது ஏறி ஊர்வசி ரவுத்தேலா கொடுத்துள்ள போஸ் வைரலாகி வருகிறது. உடல் முழுக்க மறைத்தபடி ஜெர்கினை அணிந்து கொண்டு யாக் மீது அமர்ந்திருக்கும் போட்டோக்களை போட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.

ஏன் இப்படி

ஏன் இப்படி

பாலிவுட் நடிகையான இவருக்கு 35 மில்லியன் ஃபாலோயர்கள் சேர்ந்துள்ளனர். தனது மிகப்பெரிய இன்ஸ்டாகிராம் குடும்பத்திற்காகத் தான் தற்போது தனக்கு மிகவும் பிடித்த இந்த போஸை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் நடிகை ஊர்வசி ரவுத்தேலா. லெஜண்ட் சரவணா ஹீரோயினின் இந்த செம கூல் போட்டோக்களுக்கு லட்சக் கணக்கில் லைக்குகள் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X