ஓ.டி.டி-யில் வெளியாகிறது இன்னொரு ஹீரோயின் படம்.. கல்லூரி, கன்னித்தன்மை..அப்படி இப்படி கதையாமே?

By

சென்னை: ஓ.டி.டி. தளத்தில் பிரபல ஹீரோயின் நடித்துள்ள விவகாரமான படமும் வெளியாக இருக்கிறது.

Recommended Video

Amazon Prime ல் வெளியாகும் 7 படங்கள் | PonMagal Vandhal, Penguin

'சிங் சாப் த கிரேட்' என்ற இந்திப் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர், பிரபல மாடல் ஊர்வசி ரவ்தெலா. இதில் சன்னி தியேல், பிரகாஷ் ராஜ் உட்பட பலர் நடித்திருந்தனர்.

இதையடுத்து, ஷனம் ரே, கிரேட் கிராண்ட் மஸ்தி, காபில் ஹேட்ஸ்டோரி 4, பகல்பந்தி உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

அமலா பால்

அமலா பால்

இப்போது, தமிழில் வெளியான திருட்டுப்பயலே 2 படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்துள்ளார். இந்த படத்தை சுசி கணேசன் இயக்கி உள்ளார். இதில் தமிழில் அமலா பால் நடித்திருந்த கேரக்டரில் நடித்துள்ளார். இதையடுத்து தெலுங்கு படம் ஒன்றில் ஒரு பாடலுக்கு ஆட இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஊர்வசி, அடிக்கடி ஹாட் புகைப்படங்களை அதில் பதிவிட்டு வருவார்.

கல்லூரி மாணவி

கல்லூரி மாணவி

இவர், 'விர்ஜின் பானுப்ரியா' என்ற இந்திப் படத்தில் நடித்திருக்கிறார். தனது கன்னித்தன்மையை இழக்க நினைக்கிறார் கல்லூரி மாணவி. இந்த காலத்தில் இது எளிதானது என்று நினைத்தாலும் அவரது முயற்சி எல்லாம் தோல்வியில் முடிகிறது. எதிர்காலத்தை கணிக்கும் ஒருவர், இந்தப் பெண்ணுக்கு அது நடக்காது என்கிறார். பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கொஞ்சம் அப்படி இப்படியான கதை.

கொரோனா

கொரோனா

இதை அஜய் லோகன் இயக்கி உள்ளார். கவுதல் குலாடி, அர்ச்சனா புரன் சிங், ராஜீவ் குப்தா உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை ஜூன் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால், கொரோனாவால் மொத்த திட்டமும் மாறிவிட்டது. தியேட்டர்கள் திறப்பதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதாலும், திறந்தாலும் மக்கள் பயமில்லாமல் வருவார்களா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

பொன்மகள் வந்தாள்

பொன்மகள் வந்தாள்

இதனால் பல தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை ஓ.டி.டி தளங்களில் வெளியிட முடிவு செய்துள்ளனர். அதன்படி தமிழில் ஜோதிகா, பாக்யராஜ் உட்பட பலர் நடித்துள்ள 'பொன்மகள் வந்தாள்' உட்பட சில படங்கள் ஓ.டி.டி-யில் வெளியாக உள்ளன. பொன்மகள் வந்தாள் வரும் 29 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது.

சகுந்தலா தேவி

சகுந்தலா தேவி

இந்தியில் அமிதாப் பச்சன், ஆயுஷ்மன் குரானா நடித்துள்ளா குலாபோ சிடாபோ, வித்யாபாலன் நடித்துள்ள சகுந்தலா தேவி, நவாஸூதின் சித்திக் நடித்துள்ள கூம்கேது உட்பட பல படங்கள் ஓடிடியில் வெளியாகின்றன. அந்த வரிசையில், இப்போது ஊர்வசி ரவ்தெலா நடித்துள்ள இந்தப் படமும் ஓ.டி.டியில் வெளியாக இருக்கிறது.

காத்திருப்பது

காத்திருப்பது


'தியேட்டர்கள் திறக்கப்படுவதில் நிச்சயமற்றத் தன்மை இருக்கிறது. இதனால் காத்திருப்பதை விட ஓ.டி.டி. சிறந்த வழியாக இருக்கிறது. அதனால் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் முடிவாகிவிடும் என்று இதன் தயாரிப்பாளர் மகேந்திரா தாரிவால் தெரிவித் துள்ளார். இதையடுத்து ஓ.டி.டியில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து

வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X