த்ரோபேக்னா இது த்ரோபேக்.. ஆரஞ்சு பிகினியில்.. உச்ச கட்ட கவர்ச்சியில்.. ஒய்யாரமாய் நிற்கும் ஊர்வசி!
மும்பை: நடிகை ஊர்வசி ரவுத்தேலா கடற்கரையில் ஆரஞ்சு நிற பிகினி அணிந்து கொண்டு உச்ச கட்ட கவர்ச்சியில் போஸ் கொடுத்துள்ள த்ரோபேக் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
லாக்டவுன் தொடங்கியதில் இருந்தே பீச் புகைப்படங்களையும், நீச்சல் குளத்தில் பிகினியில் உல்லாச குளியல் போடும் வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களை சம்மரில் ஜில் பண்ணி வந்தார்.
மேலும், நடன வீடியோக்களையும், வொர்க்கவுட் வீடியோக்களையும் பதிவிட்டு தனது ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுத்து வருகிறார்.

மனிதாபிமானம்
வீட்டில் வளரும் விலை உயர்ந்த நாய்களுக்கு தரமான உணவுகள் கிடைக்கின்றன. ஆனால், லாக்டவுன் காரணத்தால் ஆள் நடமாட்டமே இல்லாத தெருக்களில் வாடும் நாய்களுக்கும் அவற்றின் குட்டிகளுக்கும் உணவு அளித்து மகிழ்ந்துள்ளார் நடிகை ஊர்வசி ரவுத்தேலா. சமீபத்தில் வைரலான அவரது புகைப்படங்களை பார்த்து பலரும் பாராட்டினார்கள்.

சிங்கப்பெண்ணே
தளபதி விஜய்யின் பிகில் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான சிங்கப்பெண்ணே பாடலில் பெண்கள் கால்பந்தாட்ட அணியினர் தயாராகும் வீடியோவை போல சமீபத்தில் வேற லெவல் வொர்க்கவுட் செய்யும் புகைப்படத்தை நடிகை ஊர்வசி ரவுத்தேலா பதிவிட்டு வைரலாக்கி உள்ளார். அவரது வொர்க்கவுட் வீடியோக்களும் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
நியூ க்ரஷ்
ஸ்லிம்மான செக்ஸியான உடல் தோற்றத்தை கொண்டுள்ள நடிகை ஊர்வசி ரவுத்தேலா, அடிக்கடி நடனம் ஆடும் வீடியோக்களையும் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். சமீபத்தில் ரெட் கலர் கிராப் டாப் மற்றும் டெனிம் ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு ஆடிய வீடியோவை பதிவிட்டு, கொரோனா வைரஸ் தான் தன்னுடைய புதிய கிரஷ் என கேப்ஷன் போட்டு டிரெண்ட் செய்தார்.

ஆரஞ்சு நிற பிகினியில்
இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து படைக்கும் விதத்தில் தனது த்ரோபேக் போட்டோஷூட் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார். ஆரஞ்சு நிற பிகினியில் உச்சகட்ட கவர்ச்சியில் ஒய்யாரமாக நின்றபடி போஸ் கொடுத்து பாலிவுட் ரசிகர்கள் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளார் இந்த சனம் ரே நடிகை.

நீங்க கடவுள் தான்
வெறும் 4 மணி நேரத்தில் தனது பிகினி புகைப்படத்தை பதிவிட்டு 4 லட்சம் லைக்குகளை அள்ளியுள்ளார் பாலிவுட் செக்ஸி குயின் ஊர்வசி ரவுத்தேலா. முன்னதாக தன்னை பெண் கடவுள் என அழையுங்கள் என ரசிகர்களுக்கு ஊர்வசி ரவுத்தேலா அன்புக் கட்டளை இட்டு இருந்த நிலையில், இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், நீங்கள் கவர்ச்சி கடவுள் தான் என வர்ணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











