கோல்டன் பின் குத்திய வெர்சேஸ் உடை.. ஹாலிவுட் நடிகைகளுக்கு பிறகு ஊர்வசி தான் போட்டு இருக்காராம்!..

சென்னை: லெஜண்ட் சரவணா படத்தில் நாயகியாக நடித்து வரும் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா, வெர்சேஸ் பேபி எனும் வீடியோ பாடலுக்காக வெர்சேஸ் உடையை அணிந்து கொண்டு நடித்துள்ளார்.

லாக்டவுன் நேரத்திலும் வீடியோ பாடல்களில் நடித்து அதனை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார் நடிகை ஊர்வசி ரவுத்தேலா.

இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை ரணகளப்படுத்தி வருகிறார்.

கிளாமர் குயின்

கிளாமர் குயின்

பாலிவுட்டில் வெளியான ஹேட் ஸ்டோரி 4 திரைப்படத்தில் நாயகியாக நடித்து பிரபலமானவர் ஊர்வசி ரவுத்தேலா. தொடர்ந்து சனம் ரே, விர்ஜின் பானுப்பிரியா என ஏகப்பட்ட கவர்ச்சி படங்களில் நடித்து பாலிவுட்டின் கிளாமர் குயினாக வலம் வருகிறார்.

100 மில்லியன் வியூஸ்

100 மில்லியன் வியூஸ்

கடந்த மாதம் வெளியான தூப் காயே எனும் வீடியோ பாடலில் பாடகர் குரு ரந்தவாவுடன் மிக நெருக்கமாக கடற்கரைகளில் உருண்டு புரண்டு நடித்திருந்தார் ஊர்வசி ரவுத்தேலா. ரொமான்ட்டிக் பாடலான அந்த பாடல் டி சீரிஸ் யூடியூபில் வெளியாகி 100 மில்லியன் வியூக்களையும் ஒரு மில்லியன் லைக்குகளையும் அள்ளி அசத்தியது.

வீடு முழுக்க பணம்

வீடு முழுக்க பணம்

கடந்த வாரம் முகமது ரமதான் உடன் இணைந்து நடித்த வெர்சேஸ் பேபி வெளியானது. இதுவரை 11 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ள அந்த பாடலின் துவக்கத்தில் வீடு முழுவதும் டாலர்கள் கொட்டிக் கிடக்க நாற்காலி ஒன்றில் ஊர்வசி ரவுத்தேலா அமர்ந்திருப்பார். பாடலின் டைட்டிலே வெர்சேஸ் பேபி என்பதால் உலகின் காஸ்ட்லியான தங்க பின் கொண்ட வெர்சேஸ் உடையை அணிந்து நடித்திருப்பார்.

கோல்டன் பின்

கோல்டன் பின்

தங்கத்தால் ஆன சேஃப்டி பின் குத்தப்பட்டுள்ள வெர்சேஸ் உடையை இதற்கு முன்னதாக சில ஹாலிவுட் நடிகைகள் மட்டுமே அணிந்துள்ளனர் என்றும், தற்போது தான் அதனை அணிந்து நடித்துள்ளேன் என்றும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ஒரே அலம்பல் செய்து வருகிறார்.

ஹாலிவுட் நடிகைகள்

ஹாலிவுட் நடிகைகள்

1994ம் ஆண்டும் ஹாலிவுட் நடிகையான எலிசபெத் ஹர்லி வெர்சேஸ் கோல்டன் சேஃப்டி பின் உடையை அணிந்து ஓவர்நைட்டில் உலகப் புகழ் அடைந்தார். அதன் பின்னர், வொண்டர் உமன் ஆன நம்ம கால் காடட் இந்த உடையை அணிந்துள்ளார். தற்போது இந்திய நடிகை ஊர்வசி ரவுத்தேலா இந்த உடையை அணிந்து அந்த வீடியோ பாடலில் நடனமாடி உள்ளார்.

என்ன விலை

என்ன விலை

பிரபல ஆடை நிறுவனமான வெர்சேஸ் நிறுவனத்தின் பாரம்பரியம் மிக்க இந்த உடை இன்னமும் வெர்சேஸ் வெப்சைட்டில் 6,500 பவுண்டுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஃபேஷன் விரும்பியான ஊர்வசி ரவுத்தேலா அந்த உடையில் எடுத்துக் கொண்ட ஏகப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X