டேய் தம்பி.. ஒழுங்கா பேட், பால் மட்டும் ஆடு.. ரிஷப் பண்ட்டுக்கு ஊர்வசி ரவுத்தேலா சாட்டையடி பதில்!

மும்பை: பிரேக்கப் செய்து கொண்டு முன்னாள் காதலர்கள் இருவரும் சோஷியல் மீடியாவில் மாறி மாறி சண்டைப் போட்டுக் கொண்டால் அது இப்படித்தான் இருக்கும்.

பிரபலமாக வேண்டி எந்த பொய்யை வேண்டுமானாலும் சிலர் வாய்க் கூசாமல் கூறுவார்கள் என ஊர்வசியை ரிஷப் பண்ட் வம்பிழுத்தார்.

இந்நிலையில், சோட்டு பையா ஒழுங்கா கிரிக்கெட் மட்டும் ஆடு என மிரட்டி இருக்கிறார் ஊர்வசி ரவுத்தேலா.

எக்ஸுக்கும் எக்ஸுக்கும் சண்டை

எக்ஸுக்கும் எக்ஸுக்கும் சண்டை

லெஜண்ட் சரவணன் நடிப்பில் வெளியான தி லெஜண்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பாலிவுட் ஹீரோயின் ஊர்வசி ரவுத்தேலா. இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் மற்றும் ஊர்வசி ரவுத்தேலா ஒரு காலத்தில் காதலர்களாக இருந்தனர் என பாலிவுட்டில் ரூமர்கள் கிளம்பின. இருவரும் படு நெருக்கமாக பல இடங்களில் கட்டிப்பிடித்தபடி சென்ற புகைப்படங்களும், வீடியோக்களும் டிரெண்டானது தான் அந்த வதந்திக்கு காரணம்.

பிரேக்கப் ஆகிடுச்சு

பிரேக்கப் ஆகிடுச்சு

இருவருக்கும் இடையே ஈகோ கிளாஷ் ஆன நிலையில், ஒருவரை ஒருவர் சோஷியல் மீடியாவில் பிளாக் செய்து கொண்டு பிரேக்கப் செய்தனர். ஆனால், அதன் பின்னரும் ரிஷப் பண்ட் விளையாட்டை மைதானத்திற்கே சென்று கொடியெல்லாம் அசைத்து ஊர்வசி ரவுத்தேலா பார்த்தது பெரும் பரபரப்பை கிளப்பியது.

பேட்டியால் கிளம்பிய பூகம்பம்

பேட்டியால் கிளம்பிய பூகம்பம்

சமீபத்தில் மீடியா ஒன்றுக்கு பேட்டியளித்த ஊர்வசி ரவுத்தேலா, ஹோட்டல் லாபியில் என்னை பார்க்க ஒருத்தன் ரொம்ப நேரம் வெயிட் பண்ணான் என்கிற விஷயத்தை ஓப்பன் செய்ய, அந்த பேட்டி தற்போது டிரெண்டாகி வருகிறது. அதில், ரிஷப் பண்ட் பெயரை அவர் ரிவீல் செய்யவில்லை என்றாலும், ரசிகர்கள் ரிஷப் பண்ட் தான் என கமெண்ட் போட்டு தாக்கினர். இதனால், கடுப்பான ரிஷப் பண்ட் போட்ட போஸ்ட் பூகம்பத்தை கிளப்பியது.

மைக் கிடைச்சா போதுமே

மைக் கிடைச்சா போதுமே

பிரபலமாக வேண்டும் என்பதற்காக இஷ்டத்துக்கு சிலர் மீடியாவில் பொய் சொல்லி வருகின்றனர் என கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோபத்தை கொட்ட, சோஷியல் மீடியாவில் அது டிரெண்டானது. உடனடியாக தனது போஸ்ட்டையே நீக்கி விட்டார் ரிஷப் பண்ட்.

சோட்டு பையா

சோட்டு பையா

ஊர்வசி ரவுத்தேலாவும் சோஷியல் மீடியாவை பார்க்காமலா இருப்பார். ரிஷப் பண்ட் போட்டு டெலிட் பண்ண நிலையில், அவரை வரிந்துக் கட்டிக் கொண்டு வந்து வறுத்தெடுத்திருக்கிறார். சோட்டு பையா (சின்னத் தம்பி).. ஒழுங்கா பேட், பால் மட்டும் ஆடு, என்கிட்ட உன் விளையாட்டை காட்டாதே என கடுமையான வார்ன் செய்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Recommended Video

The Legend | களத்தில் இறங்கிய Legend Saravanan,என்ன பண்ணாரு தெரியுமா? *Kollywood
ஊர்வசி ரவுத்தேலா ட்ரோல்

ஊர்வசி ரவுத்தேலா ட்ரோல்

ரிஷப் பண்ட்டுக்கு ஏகப்பட்ட கிரிக்கெட் ரசிகர்கள் உள்ள நிலையில், ஊர்வசி ரவுத்தேலாவை மார்க்கெட் இழந்ததால் தான் தென்னிந்தியா பக்கம் சென்று விட்டார் என்றும், கில்மா நடிகை என்றும் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X