ஒரு பாடலுக்கு ஆட இத்தனை கோடி கேட்ட பிரபல ஹீரோயின்.. அதிரடியாக முடிவை மாற்றிய தயாரிப்பாளர்!

By

சென்னை: ஒரே ஒரு பாடலில் ஆடுவதற்காக பிரபல நடிகை கேட்ட தொகையால் தயாரிப்பாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பிரபல தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுன் நடிக்கும் படம், புஷ்பா. இதில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின். சுகுமார் இயக்குகிறார்.

தேவிஶ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் தாடி மீசையுடன் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் அல்லு அர்ஜூன் லுக், ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

டிவிட்டர் சாதனை

டிவிட்டர் சாதனை

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், வெளியான 24 மணி நேரத்தில் 84 ஆயிரத்துக்கு அதிகமான லைக்ஸ்களை பெற்று, ட்விட்டரில் சாதனை படைத்தது. இந்தப் படம், செம்மரக்கட்டை கடத்தல் தொடர்பான கதையை கொண்டது. இதில் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடிக்க இருந்தார். அவர் அதிக சம்பளம் கேட்டதால் கன்னட நடிகரை ஒப்பந்தம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது,

லாக்டவுன் காரணமாக

லாக்டவுன் காரணமாக

இந்தப் படத்தின் ஷூட்டிங் லாக்டவுன் காரணமாக தடைபட்டுள்ளது. அல்லு அர்ஜுன் நடித்து ஜனவரியில் வெளியான அலா வைகுந்தபுரம்லோ சூப்பர் ஹிட்டானதால், இந்தப் படத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனால், இந்தப் படத்துக்கு அதிக பொருட்செலவில் ஆக்‌ஷன் காட்சிகளை அமைக்க முடிவு செய்திருந்தனர்.

பாலிவுட் ஹீரோயின்

பாலிவுட் ஹீரோயின்

கொரோனா லாக்டவுன் காரணமாக, செலவுகளை குறைக்கத் தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட பிரபல பாலிவுட் ஹீரோயின் ஊர்வசி ரவ்தெலாவிடம் பேசி வந்தனர். அவர் முடிவாகிவிடுவார் என்றே கூறப்பட்டது. இந்நிலையில் அவர் ஒரு பாடலுக்கு ஆட, ஒரு கோடி ரூபாய் கேட்டதாகக் கூறப்படுகிறது.

வேறு நடிகை

வேறு நடிகை

இப்போதிருக்கும் சூழலில் ஒரு பாடலுக்கு ஆடுவதற்காக, ஒரு கோடி ரூபாயை செலவழிக்க வேண்டாம் என்று தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளாராம். இதனால் அவரை நீக்கிவிட்டு வேறு நடிகையை தேடி வருகின்றனர். நடிகை ஊர்வசி ரவ்தெலா, பாலிவுட்டின் லேட்டஸ்ட் சென்சேசன். சிங் சாப் த கிரேட்', ஷனம் ரே, ஹேட் ஸ்டோரி 4 உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

திருட்டுப் பயலே 2

திருட்டுப் பயலே 2

இப்போது, சுசி கணேசன் இயக்கியுள்ள 'திருட்டுப் பயலே 2' படத்தின் இந்தி ரீமேக்கில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். அஜய் லோஹன் இயக்கத்தில் 'விர்ஜின் பானுப்பிரியா' என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படங்கள் ரிலீஸ் ஆகி இருக்க வேண்டும். லாக்டவுன் காரணமாக இதன் ரிலீஸ் ரத்து செய்யப்பட்டுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X