Vidaamuyarchi: ட்விட்டரில் அஜித் ரசிகர்களிடம் ஓட்டு கேட்ட டிரம்ப்.. விடாமுயற்சி அப்டேட் கேட்டு கதறல்

அமெரிக்கா: அமெரிக்காவின் 47வது அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் நவம்பர் மாதம் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பிரச்சாரங்கள் மிகவும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருப்பதால் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்துக் கொண்டு உள்ளது. களத்தில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் தற்போதைய துணை அதிபரான கமலா ஹாரீஸ் இடையே கடுமையான போட்டி நிலவுகின்றது. இருவரும் தங்களுக்கான வாக்குகளை சேகரிப்பதில் பெரும் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் டொனால்ட் ட்ரம்ப் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் அஜித் ரசிகர்களிடம் தனக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரான கமலா ஹாரீஸ் போட்டியிடுகின்றார். முதலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபரான ஜோ பைடன் வேட்பாளராக களத்தில் நின்றார். அதன் பின்னர் அவர் விலகவே, கமலா ஹாரீஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடுகின்றார். இந்தத் தேர்தலில் அவர் வெற்றி பெற்றால், அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையைப் பெறுவார். மேலும் கமலா ஹாரீஸ் இந்திய வம்சாவளியைச் சார்ந்த பெண் என்பதால் இது இந்தியாவுக்கும் பெருமைக்குரிய விஷயமாக பார்க்கப்படும். இதனால் இந்தியா, அமெரிக்கா உறவுகள் இன்னும் நெருக்கமாகும் என கூறப்படுகின்றது.

vidaamuyarchi ajithkumar

கருத்து கணிப்பு: அதேபோல் கமலா ஹாரீஸ்க்கு மிகவும் சவாலான வேட்பாளராக குடியரசுக் கட்சியின் வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் உள்ளார். இந்தத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் டொனால்ட் டிரம்ப் மீது இரண்டு முறை துப்பாக்கி சூடு நடத்த முயற்சி செய்யப்பட்டது. நூலிழையில் தப்பிய டொனால்ட் டிரம்புக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கருத்துக் கணிப்புகள் மாறி மாறி வந்து கொண்டு உள்ளதால் இதுவரை யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது தெரியாமல் உள்ளது.

vidaamuyarchi ajithkumar

டிரம்ப்: இந்நிலையில் இருவரும் தங்களுக்கான வாக்கு சேகரிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருவதால் இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் நாள்தோறும் வந்து கொண்டு உள்ளது. இந்நிலையில், டொனால்ட் டிரம்ப்பின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இருந்து, நடிகர் அஜித்தின் ரசிகர்களின் பக்கத்தை டேக் செய்து, வரும் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் தனக்கு வாக்களிக்க தயாராகுங்கள் என பதிவிடப்பட்டுள்ளது. அதாவது அந்தப் பதிவில், "வடக்கு கரோலினாவிற்கான முக்கியமான தேர்தல் அறிவிப்புகளை உங்களுக்கு அனுப்புகிறேன். நவம்பர் 5 ஆம் தேதிக்குள் டொனால்ட் ஜே. டிரம்பிற்கு வாக்களிக்கத் தயாராக உள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்" என பதிவிடப்பட்டுள்ளது.

vidaamuyarchi ajithkumar

விடாமுயற்சி அப்டேட்: டொனால்ட் டிரம்பின் இந்த எக்ஸ் பதிவினை அஜித் ரசிகர்கள் பல சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக டொனால்ட் டிரம்ப் அஜித் ரசிகர்களிடம் வாக்கு கேட்டுள்ளது என்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது என்றாலும், அஜித் ரசிகர்கள் இந்த எக்ஸ் பதிவின் ரிப்ளேவில், அஜித்தின் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி எப்போது எனக் கேட்டு ட்வீட் செய்து வருகின்றனர். மேலும் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதியைச் சொல்லிவிட்டால் நிச்சயம் உங்களுக்கு வாக்கு அளிப்பதாகவும் கிண்டலாக பதில் அளித்து வருகின்றனர். இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. அஜித் நடிப்பில் 95 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் இன்னும் ஒரு பாடல் மட்டும் படமாக்கவேண்டும் என கூறப்படுகின்றது. இப்படியான நிலையில், படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டது. ஆனால் படக்குழு அது தொடர்பாக எந்த தகவலும் கூறவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் அப்செட் அடைந்துள்ளனர்.

vidaamuyarchi ajithkumar

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X