விஜய் கையெழுத்திட்ட துண்டுச்சீட்டு...பொக்கிஷமாக பதிவிட்ட அமெரிக்க ரசிகர்
ஜார்ஜியா : விஜய் தற்போது, தளபதி 65 படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார். 3 நாட்களுக்கு முன் தான் அமெரிக்காவின் ஜார்ஜியாவில் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டது.
நெல்சன் திலீப்குமார் இயக்கும் தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் அபர்னா தாஸ், விடிவி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர்.

இன்னும் 2 வாரங்களுக்கு தொடர்ந்து ஜார்ஜியாவில் படப்பிடிப்புக்கள் நடத்தப்படும் எனவும், முக்கிய காட்சிகள் பலவும் இங்கு படமாக்கப்பட உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. குறுகிய நாட்கள் மட்டும் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரஜினியை போன்ற விஜய்க்கும் உலகின் மற்ற நாடுகளிலும் ரசிகரகள் உள்ளனர். ஏற்கனவே சூட்டிங் ஸ்பாட்டில் விஜய், படிக்கட்டுகளில் அமர்ந்து பேப்பர் ஒன்றை கையில் பார்த்துக் கொண்டிருக்கும் ஃபோட்டோ ஒன்று கசிந்து, வைரலாகி வருகிறது.
இந்நிலையில் ஜார்ஜியாவில் விஜய் ரசிகர் ஒருவர், துண்டு காகிதத்தில், விஜய்யிடம் ஆட்டோகிராஃப் வாங்கி உள்ளார். அந்த துண்டு காகித ஃபோட்டோவை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த அதிர்ஷ்டசாலி ரசிகரின் பதிவு, தற்போது வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











