twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தொடர்ச்சியாக தடை.. பிரச்சனை.. சிம்புவுக்காக குரல் கொடுத்த அம்மா.. ஆவேச பேச்சு.. தீயாய் பரவும் வீடியோ

    |

    சென்னை: சிம்பு படத்திற்கு தொடர்ச்சியாக பிரச்சனைகளும் தடைகளும் எழுந்து வருவதாக அவரது தாயார் உஷா ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

    நடிகர் சிம்பு, மைக்கேல் ராயப்பன் தயாரித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை எற்பட்டது.

    நடிகர் விவேக்கின் கடைசி காமெடி ஷோ.. அட்டகாச வீடியோவை வெளியிட்டு சூர்யா நெகிழ்ச்சி!நடிகர் விவேக்கின் கடைசி காமெடி ஷோ.. அட்டகாச வீடியோவை வெளியிட்டு சூர்யா நெகிழ்ச்சி!

    இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் சிம்பு நடிக்கும் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பை நடத்தவும் மைக்கேல் ராயப்பன் தரப்பு பிரச்சனை செய்வதாக தெரிகிறது

    கஷ்டப்பட்டு ஷூட்டிங் ஆரம்பிச்சுருக்கோம்

    கஷ்டப்பட்டு ஷூட்டிங் ஆரம்பிச்சுருக்கோம்

    இதுதொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கட்டப்பஞ்சாயத்து நடத்தப்படுவதாக, நடிகர் சிம்புவின் தாயாரான உஷா ராஜேந்தர் தெரிவிதுள்ளார். இதுகுறித்து உஷா ராஜேந்தர் ஆவேசமாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசியிருப்பதாவது, ஈஸ்வரன் படத்துக்கு படம் ஆரம்பிக்கும் போது அவ்ளோ பிரச்சனை பண்ணாங்க.. இப்போ வெந்து தணிந்தது காடு படத்துக்கும் அவ்ளோ பிரச்சனை பண்றாங்க ஆரம்பிக்க விட மாட்றாங்க. ஒவ்வொரு படத்துக்கும் நான் போய் பேசி பேசி க்ளீயர் பண்ணி விடுறேன். இந்தப் படத்துக்கும் அவ்ளோ கஷ்டப்பட்டு ஷூட்டிங் ஆரம்பிச்சுருக்கோம்.

    எந்த பிரச்சனையும் இல்லன்னு சொல்றாங்க

    பிரஸ் மீட்ல கேட்டா மட்டும் எங்களுக்கும் சிலம்புவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லிங்க இன்னைக்கு கூட ஷூட்டிங் நடந்துட்டுதானே இருக்கு.. நாங்க ஏன் அவரு படத்த தடுக்கப்போறோம் னு சொல்லிட்டு ஒவ்வொரு பட தயாரிப்பாளர்களுக்கும் பிரச்சனை கொடுத்துட்டு இருக்காங்க.

    நான் என்ன கேக்குறேன்னா.. ஒரு நடிகருக்கும் ஒரு தயாரிப்பாளருக்கும் இடையே ஒரு பிரச்சனை இருக்கும் போது ஒரு பஞ்சாயத்து கூட்டப்படுது. இதுல நடிகர் சம்பந்தப்பட்ட நான் வந்திருக்கேன், தயாரிப்பாளர் சம்பந்தமா அந்த தயாரிப்பாளர் சங்கத்துலேருந்து வந்திருக்காங்க.

    ஆர்கே செல்வமணி வர அவசியம் என்ன?

    ஆர்கே செல்வமணி வர அவசியம் என்ன?

    ஆனா செல்வமணி சார் ஏன் வந்தாருன்னு எனக்கு புரியல. ஏன்னா 24 கிராஃப்ட் இருக்கு. அந்த 24 கிராப்ட்ல தயாரிப்பாளர் இருக்காங்க, கேமரா மேன் இருக்காங்க, எடிட்டர்ஸ் இருக்காங்க.. அவங்களோட தயாரிப்பாளர் பிரச்சனைன்னா செல்வமணி சார் அந்த பஞ்சாயத்துக்கு அவர கூப்பிடலாம், நடிகர்களுக்கு என தனி சங்கம் உள்ளது. அந்த சங்கம் 24 கிராஃப்ட்டுக்கு அப்பாற்பட்டது. அப்படி இருக்கும் போது அதுல ஒரு பஞ்சாயத்து நடக்கும் போது செல்வமணி சார் வர வைக்கப்பட வேண்டிய அவசியம் என்ன?

    அவர் வரவேண்டிய அவசியம் இல்ல

    அவர் வரவேண்டிய அவசியம் இல்ல

    யோசிச்சு பார்க்குறேன்.. செல்வமணியே சொல்லியிருக்கார் தமிழ் தயாரிப்பாளர் சங்கம் வந்து என்னை ஒரு நண்பனா பார்க்காமா அடியாள் மாதிரி பயன்படுத்துறாங்கன்னு சொல்றாரு. இதுக்கு அர்த்தம் என்ன இந்த கட்டப்பஞ்சாயத்து தீர்க்கப்படலன்னா, 24 கிராஃப்ட்லேருந்து சிலம்பரசன் படத்துக்கு ஒருத்தரையும் அனுப்பக் கூடாதுன்னு தான் அவரை கூட்டிட்டு வந்திருக்கிங்க. இல்லன்னா செல்வமணி சார் அங்க வரவேண்டிய அவசியமே அவருக்கு கிடையாது..

    முதல்வர் எங்கள் பாக்கெட்டில் என்கிறார்கள்

    முதல்வர் எங்கள் பாக்கெட்டில் என்கிறார்கள்

    என்ன தைரியத்தில் செய்கிறார்கள் என்று கேட்டால், முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் எங்களுடைய பாக்கெட்டில் இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால், இப்படியொரு விஷயத்துக்கு முதல்வர் ஸ்டாலின் துணைப்போக மாட்டார் என்று சொல்வேன். ஏனென்றால், திமுக கட்சிக்காக என்னுடைய கணவர் எப்படியெல்லாம் பாடுபட்டு இருக்கிறார் என்பது அவருக்கு நன்றாக தெரியும்.

    தொண்டையிலிருந்து ரத்தமாக வரும்

    தொண்டையிலிருந்து ரத்தமாக வரும்

    திமுக கட்சிக்காக பல்வேறு மேடைகளில் பேசியிருக்கிறார். காலை 5 மணி வரை எல்லாம் பேசுவார். ஒரு கட்டத்தில் தொண்டையிலிருந்து ரத்தமாக வரும். அதெல்லாம் பொருட்படுத்தாமல் போய் பேசுபவர் என் கணவர். அதிமுக ஆட்சியில் கருணாநிதி ஐயாவை கைது செய்தார்கள். அப்போது நான் போய் ஜெயிலை உடைத்து அவரை கூட்டுட்டு வருவேன் என்று சென்றவர் என் கணவர். அந்த அளவுக்கு திமுக கட்சிக்காக பாடுபட்டுள்ளார்.

    உஷா ராஜேந்தர் ஆவேச பேச்சு

    உஷா ராஜேந்தர் ஆவேச பேச்சு

    ஒரு காலமும் சிலம்பரசனின் படத்தை நிறுத்தவதற்கோ, ரெட் போடுவதற்கோ முதல்வர் ஸ்டாலின் துணையாக இருக்க மாட்டார். ஆனால், அவருடைய பெயரைத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். இது தொடர்ந்தால் முதல்வர் ஸ்டாலினை சந்திப்பேன், பாரத பிரதமர் மோடி ஐயாவையும் போய் சந்திப்பேன்" இவ்வாறு உஷா ராஜேந்தர் ஆவேசமாக பேசியுள்ளார். உஷா ராஜேந்தரின் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    English summary
    Usha Rajender accuses Michel Rayappan team troubling Simbu movies. Usha Rajender Video goes viral on social media.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X